14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது....

சேரி பகுதியில் உள்ள 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 27 வயதுடைய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளானர்...

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Oct 25, 2018, 12:49 PM IST
14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது....
Representational Image

சேரி பகுதியில் உள்ள 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 27 வயதுடைய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளானர்...

சண்டிகர் சேரி பகுதியில் வசித்து வரும் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளியான 27 வயதுடைய அமித் குப்தா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நேற்று (புதன்கிழமை) காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம்குறித்து செவ்வாயக்கிழமை காவல்துறையில் சிறுமியின் பெற்றோர் புகார் செய்துள்ளனர். இதையடுத்து, அவர் மீது புகார் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நேற்று காலனி எண் 4 இன் குடியிருப்பாளரான அமித் குப்தா-வை கைது செய்துள்ளனர்.

இது குறித்து சிறுமியின் குடும்பத்தினர் கூறுகையில், பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்ருவலியால் அவதிப்பட்டுள்ளார். இதையடுத்து, அவரை மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்தபோது தான் சிறுமி கற்பமாக இருப்பது  குறித்து தெரியவந்துள்ளது. மேலும், இந்த பாதிக்கப்பட்ட சிறுமி அவரால் பலமுறை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து, குப்தா, நகரின் தொழில்துறை பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய அமித் குப்தா என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் மீது, சிறுமி வன்கொடுமை மற்றும் குழந்தை பாதுகாப்பு பிரிவு பாலியல் குற்ற சட்டத்தின் கீழ் (POCSO) வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.