பிரதமர் நரேந்திர மோடி ஊடக சுதந்திரத்திற்கு ஆதரவாக பேசியுள்ளார்.
இன்று தேசிய பத்திரிகை தினம் கொண்டாப்படுகிறது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:- பேச்சு சுதந்திரத்தை பத்திரிகைகள் தான் உறுதி செய்கின்றன.
ஊடகங்கள் மீதான வெளிக் கட்டுப்பாடு சமூதாயத்திற்கு நன்மையானது பயக்காது. கருத்து சுதந்திரமானது தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும். நாட்டில் நெருக்கடி காலத்தின் போது ஊடகங்கள் அமைதியாக இருந்தன. கடந்த காலத்தில் பத்திரிகையாளர்கள் செய்தியை தருவதில் பல சிரமங்களை சந்தித்தனர். ஆனால் இன்று சவால்கள் வேறு மாதிரியாக உள்ளது.
ஒரு விஷயத்தில் 10 சதவீத காரணங்கள் பத்திரிகையாளர்களுக்கு கிடைத்தால், மற்ற 90 சதவீத விஷயங்களை அவர்கள் வெளிக்கொண்டு வருவார்கள். நான் நீண்ட நாட்களாக பத்திரிக்கை நண்பர்களை கொண்டு உள்ளேன்.
பத்திரிகையாளர்கள் இறக்கும் செய்திகள் வருகிறது. இது கவலையளிக்கக்கூடியது. உண்மை கண்டறியும்போது அவர்கள் மரணமடைகிறார்கள். நாம் சுதந்திரமாக உள்ளோம் என பேசுவது மட்டும் கூடாது. இதற்கான நடவடிக்கையை நாம் தீவிரப்படுத்த வேண்டும். நேபாள பூகம்பத்தின் போது, இந்திய மீடியாக்கள் சிறப்பாக பணிபுரிந்தன. அனைத்து இந்தியர்களையும் ஒற்றுமைபடுத்தியும், அனைத்து அண்டை நாடுகளையும் ஒருங்கிணதை்தும் உதவி செய்தன. சுத்தப்படுத்தும் பணியில் மீடியாக்கள் அற்புதமாக பணிபுரிந்தன என்றார்.