தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்களை துப்பாக்கிச் சூடு நடத்தி கொல்ல வேண்டும்: ராஜ் தாக்கரே

தனிமைப்படுத்தலின் போது பெண்கள் மருத்துவ ஊழியர்களுடன் அவர்கள் 'தவறாக நடந்து கொண்டனர்' என்று குற்றம் சாட்டிய தாக்கரே, அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டியதன் அவசியத்தையும் கேள்வி எழுப்பினார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 4, 2020, 07:48 PM IST
தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்களை துப்பாக்கிச் சூடு நடத்தி கொல்ல வேண்டும்: ராஜ் தாக்கரே title=

மும்பை: தனிமைப்படுத்தலின் போது பெண்கள் மருத்துவ ஊழியர்களுடன் தவறாக நடந்து கொண்டதாகவும், “சில சதித்திட்டங்களில்” ஈடுபட்டதாகவும் கூறப்படும் தப்லீஹி ஜமாஅத் உறுப்பினர்களை துப்பாக்கி தோட்டாக்களால் கொல்லப்பட வேண்டும் என்று எம்என்எஸ் தலைவர் ராஜ் தாக்கரே சனிக்கிழமை தெரிவித்தார்.

மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் கேள்வி எழுப்பினார்.

மக்களிடையே "உண்மையை" வெளிப்படுத்துவதற்காக , அத்தகைய நபர்களின் வீடியோக்களை சமூக ஊடகங்களில் வைரலாக பரப்ப வேண்டும் என்று எம்.என்.எஸ் தலைவர் கோரினார்.

போலீஸ் மற்றும் மருத்துவ பணியாளர்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல் குறித்து பேசிய தாக்கரே, “நிலைமையைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும்போது காவல்துறையினர் தாக்கப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்படுவதை நாம் காணலாம்” என்றார்.

டெல்லியில் உள்ள மார்க்கஸில் (தப்லிகிஸின் கூட்டம் நடந்தது). அத்தகையவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த வேண்டும். அவர்களுக்கு ஏன் சிகிச்சை கொடுக்க வேண்டும்? அவர்களைக்காக ஒரு தனி பிரிவு உருவாக்கப்பட்டு, அவர்களின் சிகிச்சை நிறுத்தப்பட வேண்டும்” என்று தாக்கரே செய்தியாளர்களிடம் கூறினார்.

"தங்கள் மதம் நாட்டை விட பெரியது என்று நினைத்து, சில சதித்திட்டங்களில் ஈடுபட விரும்பி ... அவர்கள் மக்கள் மீது துப்புகிறார்கள், காய்கறிகளை வீசி எறிகிறார்கள்.  செவிலியர்கள் முன் நிர்வாணமாக சுற்றித் திரிகிறார்கள்" என்று அவர் கூறினார்.

இதுபோன்றவர்களின் வீடியோக்கள் வைரலாக்கிவிட வேண்டும். அப்பொழுது தான் மக்கள் மத்தியில் உண்மை என்ன என்பது வெளிப்படும் என்று தாக்கரே மேலும் கூறினார்.

"வெள்ளிக்கிழமை தனது வீடியோ செய்தியில், பிரதமர் அதைப் பற்றி பேசியிருக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைப்பதைப் பற்றி பேசுவதை விட, பிரதமர் நரேந்திர மோடி தற்போதைய சூழ்நிலை மற்றும் கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கை எந்த நிலையில் இருக்கிறது என்பதை குறித்து மக்களிடம் தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கடந்த மாதம் வசாயில் உள்ள நிஜாமுதீன் போன்ற சபைக்கு அனுமதி மறுத்ததற்காக மகாராஷ்டிரா காவல்துறையை எம்.என்.எஸ் தலைவர் வாழ்த்தினார். இதனால் கொரோனா வைரஸ் பரவுவதைத் தவிர்க்கப்படுகிறது.

கடந்த மாதம் நிஜாமுதீன் சபை அனுமதி அளிக்கப்பட்டபோது கொரோனா வைரஸ் பரவுவதை டெல்லி காவல்துறை உணரவில்லை என்று அவர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், இது பழி வாங்குவதற்கோ? அல்லது விளையாடுவதற்கான நேரம் இதுவல்ல. "மதத்தைப் பற்றியும் பேச வேண்டிய நேரம் இதுவல்ல, ஆனால் முஸ்லிம்களிடையே சில பிரிவுகள் என்ன செய்கின்றன.

"சில நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு இருப்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். நாங்களும் வீட்டில் தான் இருக்கிறோம். மக்கள் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்காவிட்டால் லாக்-டவுன் காலம் நீட்டிக்கப்படலாம், இது தொழில்கள் மற்றும் அரசாங்கத்தின் செயல்பாட்டை மோசமாக பாதிக்கும். மேலும் இது பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுக்கும்.

மக்களுக்கு சேவை செய்வதற்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்துள்ளதற்காக மருத்துவர்கள், காவல்துறை மற்றும் பிற அரசு ஊழியர்கள் தண்ணீர், மின்சாரம் மற்றும் உணவு தானியங்களை வழங்குவதை தாக்கரே பாராட்டினார்.

Trending News