மோடி எனது பிரதமர், எங்கள் தேர்தலில் பாக்., தலையிட முடியாது: கெஜ்ரிவால்!

மோடி இந்தியாவின் பிரதமர் என்றும், பயங்கரவாதிகளின் தலையீட்டை பொறுத்துக்கொள்ள மாட்டோம் எனவும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சரியான பதிலடி!!

Last Updated : Jan 31, 2020, 06:16 PM IST
மோடி எனது பிரதமர், எங்கள் தேர்தலில் பாக்., தலையிட முடியாது: கெஜ்ரிவால்! title=

மோடி இந்தியாவின் பிரதமர் என்றும், பயங்கரவாதிகளின் தலையீட்டை பொறுத்துக்கொள்ள மாட்டோம் எனவும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சரியான பதிலடி!!

டெல்லி: 70 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்திற்கு வரும் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், களத்தில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளின்  தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ளது. டெல்லி தொகுதியில் ஆம் ஆத்மியின் சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க-ன் வேட்பாளராக இளைஞர் அணி தலைவர் சுனில் யாதவ், காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாணவர் அமைப்பின் டெல்லி தலைவரான ரொமேஷ் சபர்வால் ஆகியோர் போட்டியிடுவதால், அங்கு தலைவர்களின் பிரச்சாரம் களைகட்ட துவங்கியுள்ளது.

இந்நிலையில், டெல்லி சட்டமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை தோற்கடிக்க வேண்டும் என பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்த கருத்துக்கு, மோடி இந்தியாவின் பிரதமர் என்றும், பயங்கரவாதிகளின் தலையீட்டை பொறுத்துக்கொள்ள மாட்டோம் எனவும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

பிரதமர் மோடி சமீபத்தில் நடந்த NCC மாணவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் கூறுகையில்; பாகிஸ்தானை தோற்கடிக்க இந்தியாவின் முப்படைக்கு 10 நாட்கள் போதும் என தெரிவித்திருந்தார். இதை குறிப்பிட்டு பாகிஸ்தான் அமைச்சர் பவத் ஹூசைன் விமர்சித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார். அதில், இந்திய மக்கள் மோடியை தோற்கடிக்க வேண்டும், அவர் மற்றொரு மாநிலத் தேர்தலையும் இழக்க வேண்டும். காஷ்மீர் விவகாரம், குடியுரிமைச் சட்டம் மற்றும் பொருளாதாரம் தோல்வி ஆகியவற்றின் உள் மற்றும் வெளிப்புற எதிர்வினைகளால், மோடி சமநிலையை இழந்துள்ளார்" என ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். 

பாகிஸ்தான் அமைச்சரின் இந்த கருத்துக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார். பவத் ஹூசைனின் பதிவை சுட்டிக்காட்டிய அவர் பதிவில்; "மோடி இந்தியாவின் பிரதமர். எனக்கும் ஒரு பிரதமர் இருக்கிறார். டில்லி தேர்தல் இந்தியாவின் உள் பிரச்சினை மற்றும் பயங்கரவாதத்திற்கு மிகப்பெரிய ஆதரவாளர்களின் தலையீட்டை நாங்கள் பொறுத்துக் கொள்ளவில்லை. பாகிஸ்தான் எவ்வளவு முயன்றாலும், அது இந்த நாட்டின் ஒற்றுமையைத் சீர்குலைக்க முடியாது" என கெஜ்ரிவால் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

டெல்லி ஜாமியா பல்கலையில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பகிவிட்ட டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்... "டில்லி அரசு பள்ளி மாணவன் ஒருவன் ஐடி - டெக் மாநாட்டில் பேசிய வீடியோ பதிவிட்டுள்ளார். அத்துடன், தொழில்முனைவோர் ஆகும் கனவை கண்களில் பார்ப்பதால் நாங்கள் மாணவர்களின் கைகளில் பேனாக்கள் மற்றும் கம்ப்யூட்டர்களை தருகிறோம். அவர்கள் துப்பாக்கியையும், வெறுப்பையும் தருகிறார்கள். உங்கள் பிள்ளைகளுக்கு எதை தர நீங்கள் விரும்புகிறீர்கள். அதை பிப்ரவரி 8 ஆம் தேதி அன்று கூறுங்கள்" என பதிவிட்டுள்ளார். 

Trending News