முஸ்லிம் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்- மோடி

Last Updated : Oct 24, 2016, 04:22 PM IST
முஸ்லிம் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்- மோடி title=

அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கிகாக முஸ்லிம் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

உ.பி., மாநில பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:- நமது நாட்டின் பாதுகாப்பு படையினருக்கு மக்கள் தீபாவளி வாழ்த்துக்கள் கூறவேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்

உ.பி.,யை வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்ற வேண்டும். சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்தன. உ.பி.,யின் எதிர்காலத்தை மாற்ற சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். இதற்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் தங்கள் சொந்த நலனுக்காக ஆட்சி செய்கின்றன. இதனால், அவர்களின் ஆட்சியில் மாநிலம் வளர்ச்சி அடைய வில்லை. 

உ.பி. யில் விவசாயிகள் அநீதியை சந்திக்கின்றனர். போதிய தண்ணீர் இல்லாததால் இங்குள்ள விளைநிலங்கள் பாதிப்படைந்துள்ளது. எனவே மாநிலத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தும் அரசு அமைக்க மக்கள் வாய்ப்பு தர வேண்டும். உ.பி., நிலம் தனது தாய். நமது தாய் ஏமாற இனிமேலும் அனுமதிக்க கூடாது. எனது இளைய நண்பர்கள் உங்களது எதிர்காலத்தை பற்றி சந்திக்க வேண்டும். 

உங்களுக்கான நேரம் வரும் போது, வளர்ச்சிக்கு எது நல்லது என சிந்திக்க வேண்டும். என்னை உ.பி., உருவாக்கியது. இங்கிருந்து தான் பிரதமராக தேர்வாகியுள்ளேன். மற்றவர்களைவிட அதிகமாக இந்த மாநிலத்திற்கு உழைக்க விரும்புகிறேன். நாட்டிற்காக உயர் தியாகம் செய்த நரேஷ் குமார் பாலுக்கு எனது அஞ்சலியை தெரிவித்து கொள்கின்றேன்.

மூன்று முறை தலாக் விவகாரத்தை அரசியலாக்கக்கூடாது. பெண்களுக்கு சம உரிமை அளிப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும். முஸ்லிம் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும். டிவி விவாதத்தில் கலந்து கொள்பவர்கள். பெண்களின் உரிமையை, முஸ்லிம் இந்து பிரச்னையாக மாற்றக்கூடாது. 21-ம் நூற்றாண்டில், வாங்கு வங்கி அரசியல் காரணமாக, சில அரசியல் கட்சிகள் முஸ்லிம் பெண்களுக்கு அநீதி இழைத்துள்ளன. இம்முறை உ.பி., மக்கள் மாநிலத்திற்காக ஓட்டு போட வேண்டும். இதனை மக்கள் முடிவு செய்வார்கள் என்பது டில்லிக்கு தெரியும் எனக்கூறினார்.

Trending News