குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடி குஜராத்தின் பல்வேறு இடங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்.
இந்நிலையில் இன்று பிராச்சி என்ற இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் பேசியதாவது:-
தற்போது சோம்நாத் கோவிலுக்கு ராகுல்காந்தி சென்று வழிபடுகிறார் ஆனால் அக்கோவில் கட்டும் பணி தொடங்கப்பட்ட போது, அப்போதைய பிரதமர் நேரு அதிருப்தியை வெளியிட்டார்.
அதேபோல், நர்மதா அணையைக் கட்டவேண்டும் என சர்தார் படேல் வலியுருத்திய போது அதனை கடைசி வரை, நேருவின் குடும்பத்தார் நிறைவேற்ற வில்லை.
காங்கிரஸ் அரசு எப்போதும் ராணுவத்தினர் நலனை மனதில் கொண்டதில்லை என மோடி தொடர்சியாக காங்கிரஸ் மீது குற்றம்சாட்டினார்.
இதன் பின்னர் மோர்பி என்ற இடத்தில் மற்றொரு கூட்டத்தில் கலந்துக்கொண்ட பிரதமர் மோடி, அந்தப் பகுதிக்கு வந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது மூக்கைப் பொத்திக் கொண்டு சென்ற படத்தை, அப்போது சித்ரலேகா என்ற பத்திரிகை வெளியிட்டதையும் சுட்டிக்காட்டினார்!