புது டெல்லி: நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை புதன்கிழமை 11,000 ஐ கடந்தது. இந்தியாவின் கோவிட் -19 எண்ணிக்கையை 11,439 என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையில் 9,756 செயலில் உள்ளது. 1,306 குணப்படுத்தப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்ட்பட்டனர் மற்றும் 377 பேர் இறந்துள்ளனர்.
நாட்டின் கொரோனா வைரஸ் பாதிப்பு மகாராஷ்டிராவில் 3,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு உள்ளன. டெல்லியில் 1,600 கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளன.
கோவிட் -19 இறப்புகளைப் பொறுத்தவரை, நாட்டில் மொத்தம் 377 இறப்புகளில் பாதி மகாராஷ்டிராவில் நடந்தவை. சுகாதார அமைச்சின் தரவுகளின்படி 178 கோவிட் -19 இறப்புகள், அந்த மாநிலத்தில் பதிவாக்கியுள்ளது.
மகாராஷ்டிராவின் 178 இறப்புகளில், 112 மும்பையிலிருந்தும், 35 பேர் புனேவிலிருந்து மரணம் அடைந்துள்ளனர் என்று மாநில கோவிட் -19 கண்காணிப்பு டாஷ்போர்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் 50 இறப்புகளுடன் நாட்டில் இரண்டாவது மிக அதிகமான கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை உள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்ட மாநில சுகாதாரத் துறை அறிக்கையின் படி, இந்தூர் மாநிலத்தில் அதிகபட்சமாக கோவிட் -19 உயிரிழப்புகளைக் கண்டது, இதில் 37 பேர் மரணமடைந்தனர்.
30 கொரோனா வைரஸ் இறப்புகளுடன், தேசிய தலைநகரம் நாட்டில் மூன்றாவது மிக அதிகமான கோவிட் -19 இறப்புகளைக் கொண்டுள்ளது.
இந்த நான்கு இந்திய நகரங்களான மும்பை (112), புனே (35), டெல்லி (30) மற்றும் இந்தூர் (37) ஆகியவை 50% க்கும் அதிகமானா, அதாவது துல்லியமாக சொல்ல வேண்டும் என்றால் 57% ஆக இருக்க வேண்டும். நாட்டின் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 214 பேர் இந்த நாங்க்நு நகரங்களில் இறந்துள்ளனர்.
21 நாள் நாடு தழுவிய கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு செவ்வாயன்று பிரதமர் நரேந்திர மோடியால் மேலும் நீட்டிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு இப்போது மே 3 ஆம் தேதி முடிவடையும்.
ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளதால், அந்த காலகட்டத்தில் பின்பற்றப்பட வேண்டிய புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசாங்கம் புதன்கிழமை வெளியிட்டது.