கேரளாவில் ''வாகன ஓட்டிகள்'' வேலை நிறுத்தம்!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Last Updated : Jan 24, 2018, 10:29 AM IST
கேரளாவில் ''வாகன ஓட்டிகள்'' வேலை நிறுத்தம்!! title=

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கேரளாவில் பெட்ரோல் டீசல் உள்ளிட்டபொருள்களுக்கு மாநில அரசு விதித்துள்ள வரி கூடுதலாக இருப்பதால் அவற்றின் விலை அதிகரித்துள்ளதாவும், எனவே அவற்றின் விலையை குறைக்க கேரள அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வாகனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் இவற்றின் மீதான வரிகளை குறைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் இன்று வாகனங்கள் வேலைநிறுத்தம் தொடங்கி நடைபெற்று வருகிறது. வர்த்தக யூனியன்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிகிறது. 

 எனவே கேரளா பகுதி முழுவதும் ஆட்டோக்கள், சரக்கு வாகனங்கள் உட்பட பெரும்பாலான வாகனங்கள் இயக்கப்படவில்லை.

இதையடுத்து உற்பத்தி வரியை குறைக்கும்படி நிதி அமைச்சகத்தை எண்ணெய் அமைச்சகம் கேட்டுக் கொண்டு உள்ளது. எனவே, கேரளாவில் பெரும்பாலான பகுதிகள் பரபரப்பாக காட்சியளிகிறது.

மேலும்,பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்துக்கு ஏற்ப தினமும் மாற்றியமைத்து வருவதால், இதனால் பெட்ரோல், டீசல் போன்ற அத்தியாவசிய எரிபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவது குறிபிடத்தக்கது. 

Trending News