ராணுவத்தில் இணைந்த 2 மாத பயிற்சியைத் துவங்கினார் MS தோனி!

இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் தோனி, பெங்களூருவில் உள்ள இந்திய ராணுவத்தின் பாரசூட் ரெஜிமென்டில் இணைந்து 2 மாத பயிற்சியை இன்று துவங்கினார்!

Last Updated : Jul 25, 2019, 02:04 PM IST
ராணுவத்தில் இணைந்த 2 மாத பயிற்சியைத் துவங்கினார் MS தோனி! title=

இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் தோனி, பெங்களூருவில் உள்ள இந்திய ராணுவத்தின் பாரசூட் ரெஜிமென்டில் இணைந்து 2 மாத பயிற்சியை இன்று துவங்கினார்!

கடந்த 2011-ஆம் ஆண்டில் இருந்து இந்திய ராணுவ பாரசூட் ரெஜிமென்டில் தோனி லெப்டினென்ட் அந்தஸ்தில் பதவி வகித்து வருகிறார். அவ்வப்போது ராணுவத்தில் சேர்ந்து தோனி பயிற்சி பெற்று வருகிறார். தோனி ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெறுவது வளரும் இளைஞர்களை ராணுவப் பணியில் ஆர்வத்துடன் சேர்வதற்கு வழி வகுக்கும் என்பதால், அதற்கான விழிப்புணர்வாக தோனி இதனைச் செய்து வருகிறார்.

நடந்து முடிந்த உலகக்கோப்பைப் போட்டியில் தோனியின் பேட்டிங் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்ட நிலையில், தோனி கிரிக்கெட் தொடர்களில் இருந்து ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.  தோனி ஓய்வு பெற வேண்டும் என்றும் ரசிகர்களில் ஒருதரப்பினர் சமூக ஊடங்களில் வலியுறுத்தினார்கள். 

இந்த சூழலில் வரும் ஆகஸ்ட் மாதம் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் தோனி தேர்வு செய்யப்படுவாரா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதனிடையே தோனி தாமாக முன்வந்து தொடரில் இருந்து விலகினார். மேலும் தான் ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெற இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையே ராணுவ பாரசூட் ரெஜிமென்டின் அசைவுக்காக காத்திருந்த தோனிக்கு, கடந்த வாரம் ராணுவத்தில் இருந்து ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று தோனி 106 பாரா டிஏ பாரசூட் ரெஜிமென்டில் முறைப்படி சேர்ந்துள்ளார்.

இதுகுறித்து ராணுவ பாரசூட் ரெஜிமென்ட் வட்டாரங்கள் தெரிவிக்கையில் "இந்திய கிரிக்கெட் அணி வீரர் எம்.எஸ். தோனி முறைப்படி இன்று பாரசூட் ரெஜிமென்டில் சேர்ந்துள்ளார். அவருக்கு எந்த மாதிரியான பயிற்சி அளிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஜூலை 31 முதல், ஆகஸ்ட் 15-அம் தேதிவரை பயிற்சிக்கான தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தோனி ராணுவத்தில் சேர்ந்து ஆர்வத்துடன் பயிற்சி பெறுவது இளைஞர்களுக்கு ஊக்கமாக இருக்கும். வரும்காலங்களி்ல் அதிகமான இளைஞர்கள் ராணுவத்தில் சேர்வார்கள்" எனத் தெரிவித்துள்ளார். 

Trending News