ஐபிஎல் தொடர் முடிந்ததவுடன் இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூன் மாதம் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கோள்கிறது. அதேபோல ஜூலை- ஆகஸ்ட் மாதம் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கோள்கிறது. இதற்கான வீரர்கள் பட்டியலை இன்று தேர்வுக்குழு வெளியிட்டுள்ளது.
விவரமாக:
ஜூன் 11 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்கிறது. அப்போது 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் மூன்று இருபது ஓவர் போட்டித் தொடரில் விளையாடுகிறது. இருவகை போட்டிகளுக்கும் தோனி தலைமை வகிக்கிறார்.
வீரர்கள் விவரம்:- தோனி (கேப்டன்), ரிஷி தவான், மனிஷ் பாண்டே, கே.எல் ராகுல், பைஸ் பாசல், மனிஷ் பாண்டே, கருண் நாயர், அம்பத்தி ராயுடு, ரிஷி தவான், அக்சார் படேல், ஜெயந்த் யாதவ், தவால் குல்கர்னி, ஜஸ்பிரித் பும்ரா, பரீந்தர் சரன், மந்தீப் சிங் கேதர் ஜாதவ், ஜெயதேவ் உனட்காத், யூஸ்வேந்திர ஷாஹல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
#TeamIndia for #ZimvInd ODIs and T20Is @msdhoni to lead the 16-member team pic.twitter.com/zxOP1GS7Dr
— BCCI (@BCCI) May 23, 2016
ஜூலை- ஆகஸ்ட் மாதம் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின் போது 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ்யுடன் மோத உள்ளது. இப்போட்டிக்கு "விராட் கோலி" தலைமை வகிக்கிறார்.
வீரர்கள் விவரம்:- விராட் கோலி (கேப்டன்), ரகானே( துணை கேப்டன்), முரளி விஜய், ஷிகர் தவான், கே.எல் ராகுல், புஜாரா, அஜின்கியா, ரோகித் ஷர்மா, விரிதிமான் சகா, ஆர்.அஸ்வின், அமித் மிஸ்ரா, ரவீந்தர் ஜடேஜா, இஷாந்த் ஷர்மா, முகம்மது ஷமி, புவனேஷ் குமார், உமேஷ் யாதவ், ஷர்தால் தாகூர், ஸ்டூவார்ட் பின்னி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
#TeamIndia for #WIvInd Tests - @imVkohli to lead 17-member team pic.twitter.com/55oSfwp25R
— BCCI (@BCCI) May 23, 2016