மும்பை உட்பட 10 மாநகராட்சிகளுக்கு இன்று தேர்தல்

Last Updated : Feb 21, 2017, 12:35 PM IST
மும்பை உட்பட 10 மாநகராட்சிகளுக்கு இன்று தேர்தல் title=

மும்பை உட்பட மராட்டிய மாநிலத்தில் 10 மாநகராட்சிகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. 

மராட்டிய மாநிலத்தில் மும்பை, தானே, உல்லாஸ்நகர், புனே, பிம்பிரி சிஞ்ச்வாட், சோலாப்பூர், நாசிக், அகோலா, அமராவதி, நாக்பூர் ஆகிய 10 மாநகராட்சிகளுக்கு இன்று  தேர்தல் நடைபெற்று வருகிறது.. இந்த தேர்தல் களத்தில் 10 மாநகராட்சிகளிலும் உள்ள 1,268 வார்டுகளில் மொத்தம் 9,199 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மும்பை மாநகராட்சியில்  மட்டும் 2 ஆயிரத்து 271 பேர் போட்டியிடுகிறார்கள். 

கடந்த 2012-ம் ஆண்டு தேர்தலின்போது பாரதீய ஜனதாவும் மற்றும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால் இந்த தேர்தலில் பாரதிய ஜனதாவும், சிவசேனாவும் தனித்தே போட்டியிடுகிறது. பா.ஜனதா, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், நவநிர்மாண் சேனா ஆகிய கட்சிகள் தனித்து களம் இறங்கியுள்ளன. இதனால் இதுவரை இல்லாத அளவுக்கு மும்பை மாநகராட்சி தேர்தலில் பலமுனை போட்டி ஏற்பட்டுள்ளது. 

கடந்த 1 மாதமாக நடைபெற்று வந்த பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் முடிவுபெற்றது. 227 வார்டுகளை கொண்ட மும்பை மாநகராட்சிக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குபதிவு விறுவிறுப்பாக நடை பெற்று வருகிறது.

 

 

 

 

 

 

 

 

Trending News