மும்பையில் ஊரடங்கு மீறல்: ஒரே நாளில் 6,800 வாகனங்கள் பறிமுதல்!!

மகாராஷ்டிரா அரசாங்கம் "Mission Begin Again" கீழ் பல கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. 

Last Updated : Jun 29, 2020, 09:25 AM IST
    1. ஜூன் 28 அன்று 7000 க்கும் மேற்பட்ட குடிமக்கள் தங்கள் வாகனங்களை வெளியே எடுத்து கட்டம் வாரியாக திறக்கும் விதிகளை மீறினர்.
    2. மகாராஷ்டிரா அரசாங்கம் "Mission Begin Again" கீழ் பல கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.
மும்பையில் ஊரடங்கு மீறல்: ஒரே நாளில் 6,800 வாகனங்கள் பறிமுதல்!! title=

மும்பை: ஊரடங்கு விதிமுறைகளை மீறியதற்காக மும்பையின் பல்வேறு பகுதிகளிலிருந்து 6,800 வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முந்தைய நாள், மும்பை காவல்துறை புதிய வழிகாட்டுதல்களை விதித்தது, அலுவலகங்களில் கலந்துகொள்வது அல்லது மருத்துவ அவசரநிலை ஏற்பட்டால் தவிர, குடிமக்கள் தங்கள் குடியிருப்புகளின் இரண்டு கி.மீ சுற்றளவில் தாண்டி பயணிக்க முடியாது.

 

READ | சலூன் கடைகள் செயல்பட அனுமதி... இயல்பு நிலைக்கு திரும்புகிறதா மும்பை?

 

"ஜூன் 28 அன்று 7000 க்கும் மேற்பட்ட குடிமக்கள் non official / non medical / non emergency காரணங்களுக்காக தங்கள் வாகனங்களை வெளியே எடுத்து விதிகளை மீறினர். விதிமுறைகளை மதித்து, நகரம் பொறுப்புடன் திறக்கப்படுவதை உறுதி செய்வதன் மூலம் மும்பைக்காரர்கள் எங்களுடன் கைகோர்த்துக் கொள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம், ”என்று மும்பை காவல்துறை ட்வீட் செய்தது. 

 

 

 

மகாராஷ்டிரா அரசாங்கம் "Mission Begin Again" கீழ் பல கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை, முடிதிருத்தும் கடைகள் மற்றும் பார்லர்கள் நிபந்தனைகளுடன் திறக்க அனுமதிக்கப்பட்டன.

"ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள், நகரத்தின் 12 மண்டலங்களிலிருந்தும் இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உட்பட சுமார் 5,000 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்" என்று அந்த அதிகாரி கூறினார்.

நகரின் 10 வது மண்டலத்தில் அதிகபட்சம் 1,297 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன, என்றார்.

 

READ | COVID-19 பரவுதலை கட்டுப்படத்த நெரிசலான பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சீல்...

 

ஊரடங்கு விதிகளை மீறியதற்காக 1,300 நான்கு சக்கர வாகனங்கள், 297 இருசக்கர வாகனங்கள், 165 ஆட்டோ ரிக்‌ஷாக்கள் மற்றும் 128 டாக்சிகள் உட்பட சுமார் 1,890 வாகனங்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையில், மகாராஷ்டிராவில் ஞாயிற்றுக்கிழமை 5,493 கோவிட் -19 தொற்றுகள் பதிவாகியுள்ளன, இது மாநிலத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை 1,64,626 ஆக உள்ளது என்று சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மும்பை நகரில் மட்டும் இதுவரை 75,539 கோவிட் -19 தொற்றுகளும், 4,371 இறப்புகளும் பதிவாகியுள்ளன. இதன் மூலம், பிரஹன் மும்பை மாநகராட்சியின் (பி.எம்.சி) கீழ் உள்ள பகுதிகளை உள்ளடக்கிய தானே பிரிவில் இதுவரை 1,18,732 தொற்றுகள் மற்றும் 5,412 பேர் உயிரிழந்துள்ளனர்.

Trending News