மும்பை: இந்த சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல என்று மகாராஷ்டிரா (Maharashtra) அரசாங்கத்தில் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி - NCP) தலைவருமான ஜிதேந்திர அவாத் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ - CAA) மற்றும் தேசிய குடிமக்களின் பதிவு (என்ஆர்சி - NRC) பற்றி கூறினார். இந்த சட்டங்கள் கேட்கும் ஆதாரமாக முஸ்லிம்கள் தங்கள் மூதாதையரின் கல்லறையைக் காண்பிப்பார்கள், ஆனால் அவரது தாத்தாவின் கடைசி சடங்குகள் எங்கு நடந்தன என்பதை ஒரு இந்துவால் சொல்ல முடியுமா? எனக் கேள்வி எழுப்பினார்.
CAA மகாராஷ்டிராவில் அமல் செய்ய அனுமதிக்கப்படாது:
முன்னதாக முன்னாள் முதல்வரும், தற்போதைய மாநில அமைச்சருமான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசோக் சவான் கூறுகையில், பாஜகவைத் தடுக்க நாங்கள் மாநில அரசுடன் இணைந்துள்ளோம். நாங்கள் ஆட்சியில் இருக்கும் வரை மகாராஷ்டிராவில் CAA அமல் செய்யப்படாது. நாட்டிற்கு அம்பேத்கர் வழங்கிய அரசியலமைப்பிற்கு எதிராக எந்த அரசாங்கமும் செல்ல முடியாது. அது டெல்லியிலிருந்தோ அல்லது மும்பையிலிருந்தோ. நம் நாடு ஒரு மதச்சார்பற்ற நாடு என்றும், உருவாக்கப்பட வேண்டிய சட்டம் அரசியலமைப்புக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு:
கேரளாவும் பஞ்சாபும் இதுவரை CAA க்கு எதிரான தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றியுள்ளன. அதே நேரத்தில், திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான மேற்கு வங்க அரசும் CAA சட்டத்திற்கு எதிரானது என்று ஏற்கனவே கூறியுள்ளது.
இந்த சட்டத்தில் அப்படி என்ன இருக்கிறது:
இந்த சட்டம் இந்து, சீக்கிய, புத்த, கிறிஸ்தவ, சமண மற்றும் பார்சி சமூகங்களில் இருந்து குடியேறியவர்களுக்கு குடியுரிமை அளிக்க வழங்குகிறது. இந்த சட்டத்தின் கீழ், 2014 டிசம்பர் 31 அல்லது அதற்கு முன்னர் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்த ஆறு சமூகத்தை சேர்ந்த முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படும்.
ஜனவரி 10 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தது:
இந்த சர்ச்சைக்குரிய சட்டம் குடியுரிமைச் சட்டம் 1955 இன் திருத்தப்பட்ட வடிவமாகும். இது டிசம்பர் 10, 2019 அன்று நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, ஜனவரி 10 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது.
நாடு தழுவிய எதிர்ப்பு:
CAA தொடர்பாக நாடு முழுவதும் ஒரு எதிர்ப்பு உள்ளது என்பதை நான் உங்களுக்கு சொல்கிறேன். எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து, பொது மக்களும் இந்தச் சட்டத்திற்கு எதிராக வீதிகளில் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். CAA க்கு எதிரான வன்முறை ஆர்ப்பாட்டங்களின் போது 26 பேர் இறந்துள்ளதாக கூறப்பட்டு உள்ளது. அதில் உத்தரபிரதேசத்தில் மட்டுமே 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் 100 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.