குறைந்த அளவில் போதைபொருள் வைத்திருந்தால் குற்றமாகாதா?ஆர்யன் வழக்கில் புதிய சட்ட திருத்தம்!

போதை வழக்கில் கைதான ஆர்யன் கானுக்கு மத்திய சமுக நீதி மையம் சிபாரிசு செய்கிறதா  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 25, 2021, 10:59 AM IST
குறைந்த அளவில் போதைபொருள் வைத்திருந்தால் குற்றமாகாதா?ஆர்யன் வழக்கில் புதிய சட்ட திருத்தம்! title=

மும்பை: மும்பை-கோவா சென்ற சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக ரகசிய தகவல் ஒன்று என்சிபி அதிகாரிகளுக்கு கிடைத்ததன் அடிப்படையில் என்சிபி அதிகாரிகள் சொகுசு கப்பலில் நடத்திய அதிரடி சோதனையில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவராக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் 23 வயது மகன் ஆர்யன் கானும் கைது செய்யப்பட்டார்.  அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின்பு தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலிருந்து பொது சிறைக்கு மாற்றப்பட்டார். சிறையில் விசாரணை கைதிகளுக்கு வரிசை எண் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் ஆர்யன் கானுக்கு 'N956' என்ற எண் ஒதுக்கப்பட்டது.

மேலும் ஆரியன் கான் தன்னை சிக்க வைப்பதற்காக என்சிபி அதிகாரிகள் முயற்சி செய்கின்றனர் என்றும் குற்றம் சாட்டினார். இவரது ஜாமீன் மனுக்கள் அனைத்து நினாகரிப்பு செய்யப்பட்டது. இவர் ஒருமுறை மட்டும் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை சில ஆண்டுகளாகவே இவர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார் என்று எதிர் தரப்பில் இருந்தும் தகவல் அளிக்கப்பட்டது.

aryankhan

இதுகுறித்து தனது தனிப்பட்ட கருத்தினை  சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மத்திய இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். அதாவது, “இந்த இளம் வயதிலேயே போதைப்பொருள் பயன்படுத்துவது நல்ல பழக்கமன்று, அதனால் ஆர்யன் கானை கட்டாயம் போதைப்பொருள் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். அந்த மறுவாழ்வு மையத்தில் அவர் குறைந்தது 2 மாதங்களாவது இருக்க வேண்டும். அவர் சிறைங்ஙாலையில் இருப்பதை விட மறுவாழ்வு மையத்தில் இருப்பதே நல்லது.   சிகிச்சைக்கு பின்னர் மறுவாழ்வு மையத்தில் இருந்து அவர் திரும்பி வரும்போது, நிச்சயம் அவர் போதைப்பொருள் பழக்கத்தை மறந்து அதிலிருந்து மீண்டுவிடுவார். மேலும்,ஷாருக்கான் தரப்பிலிருந்து ஏரக்குறைய 5 முறையாவது ஜாமீன் கோரி மனு அளிக்கப்பட்டு,இறுதியில் அவையெல்லாம் நிராகரிக்கப்பட்டு விட்டது. 

இந்த நிகழ்வுகளை வைத்து பார்க்கும் பொழுது போதைப்பொருள் கட்டுப்பாடு துறைக்கு முழு அதிகாரம் இருக்கிறது என்பது புலப்படுகிறது. அனைத்து நடவடிக்கைகளும் முறையாக சட்டப்படி தான் நடந்து வருகிறது.மேலும் மாநில அமைச்சகத்தின் பரிந்துரை படி புதிதாக ஒரு சட்டத்யினை இயற்றிட வேண்டும்.  புதிதாக இயற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் போதைப்பொருள் வழக்கில் கைதாகும் சிறுவர்களை சிறையில் அடைத்து வைக்காமல்,போதைபொருள் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கும் பொருட்டு அந்த சட்டமானது இயற்றப்படும் ” என்று அவர் கூறினார்.   

ஏற்கனவே மத்திய சமூக நீதி அமைச்சகம், வருவாய் துறைக்கு ஒரு ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது. அதாவது,ஒரு நபரின் தனிப்பட்ட உபயோகத்துக்காக சிறிய அளவில் போதைப்பொருள் வைத்திருத்தலை குற்ற பட்டியலில் வைக்கக்கூடாது, எனவே அதனை குற்றப்பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.  மேலும், அதற்கேற்றவாறு சட்ட திருத்தங்களை அமல்படுத்த வேண்டும் என்றும் சிபாரிசு செய்துள்ளது .அதுமட்டுமல்லாது,குறைந்த அளவிலான போதைப்பொருள் வைத்திருப்பவர்களை பிடித்தால் அவர்களை சிறைக்கு அனுப்பிவிடாமல் அரசு மையங்களில் கட்டாய சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ALSO READ மொபைலில் நாள் ஒன்றுக்கு நாம் செலவழிக்கும் நேரங்கள்! அதிர்ச்சியூட்டும் தகவல்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News