வீட்டை வாடகைக்கு விடுபவர்களுக்கு முக்கிய செய்தி: வருகிறது புதிய சட்டம்

ஆதர்ஷ் வாடகைச் சட்டத்தின் மூலம் அனைத்து முரண்பாடுகளும் நீக்கப்பட்டு, ரியல் எஸ்டேட் துறைக்கு பெரிய அளவில் ஊக்கம் கிடைக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 27, 2020, 12:11 PM IST
  • ஆதர்ஷ் வாடகைச் சட்டத்தை விரைவில் கொண்டுவர அரசு தயாராகி வருகிறது
  • ஆதர்ஷ் வாடகைச் சட்டத்தின் மூலம் அனைத்து முரண்பாடுகளும் நீக்கப்பட்டும்.
  • இதனால் ரியல் எஸ்டேட் துறைக்கு பெரிய அளவில் ஊக்கம் கிடைக்கும்.
வீட்டை வாடகைக்கு விடுபவர்களுக்கு முக்கிய செய்தி: வருகிறது புதிய சட்டம் title=

புதுடெல்லி: ஆதர்ஷ் வாடகைச் சட்டத்தை விரைவில் கொண்டுவர அரசு தயாராகி வருகிறது. புதன்கிழமை இந்த தகவலை வழங்கிய ​​வீட்டுவசதி மற்றும் நகர விவகார செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா, இது ரியல் எஸ்டேட் துறைக்கு குறிப்பாக வாடகை வீடுகளுக்கு பெரிய அளவில் ஊக்கமளிக்கும் என்று கூறினார். ஆதர்ஷ் வாடகைச் சட்டத்தின் வரைவை 2019 ஜூலை மாதம் அமைச்சகம் வெளியிட்டது.

ரியல் எஸ்டேட் (Real Estate)  நிறுவனங்களின் கூட்டமைப்பான நாரெட்கோ ஏற்பாடு செய்த ஒரு வெபினாரில் உரையாற்றிய மிஸ்ரா, புலம்பெயர்ந்தோருக்கான நியாயமான வாடகை வீட்டுவசதி வளாகத்தின் (ARHC) திட்டத்தின் முன்னேற்றம் மிகவும் நல்ல விஷயம் என்றார். இந்த திட்டத்தின் மூலம், நகரங்களில் சேரிகளை அகற்றி அவர்களுக்கு நல்ல வீடுகளை அமைத்துக் கொடுக்க முடியும் என்று அவர் கூறினார்.

பொருளாதாரம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிய பிறகு, மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல நடவடிக்கைகள் காரணமாக, வீடுகளின் விற்பனை இப்போது மேம்பட்டு வருவதாக மிஸ்ரா கூறினார். மகாராஷ்டிரா, கர்நாடகா (Karnataka) போன்ற மாநிலங்கள் சொத்து பதிவு தொடர்பான பத்திரப் பதிவுக்கான கட்டணத்தை குறைத்துள்ளன. இது வீடுகளின் விற்பனையை அதிகரித்துள்ளது என்றார் அவர்.

ALSO READ: Corona Vaccine-க்கான முழு செலவையும் மோடி அரசாங்கமே ஏற்கவுள்ளதா

செயலாளர் கூறுகையில், வீட்டுத் துறையை ஊக்குவிக்கும் வகையில் ஸ்டாம்ப் வரியைக் குறைக்க அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு (Central Government) அறிவுறுத்தியுள்ளது என்றார்.

மிஸ்ரா, 'ஆதர்ஷ் வாடகைச் சட்டம் தயாராக உள்ளது. இது பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. இது பரந்த அளவிலான தாக்கங்களை ஏற்படுத்தும்.” என்று கூறினார். உத்தேசிக்கப்பட்டுள்ள ஆதர்ஷ் வாடகைச் சட்டம் குறித்த கருத்துகளைப் பெறுவதற்கான காலக்கெடு அக்டோபர் 31 அன்று காலாவதியானது என்று அவர் தெரிவித்தார். இப்போது இது குறித்து தங்கள் கருத்தை தெரிவிக்க மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

ஆதர்ஷ் வாடகைச் சட்டம் மிக விரைவில் வரவுள்ளது என்று செயலாளர் கூறினார். 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் (Census) படி மக்கள் தங்கள் வீட்டை வாடகைக்கு கொடுக்க தயங்குவதால் 1.1 கோடி வீடுகள் காலியாக உள்ளன என்பது தெரிய வந்தது என்று அவர் தெரிவித்தார்.

ஆதர்ஷ் வாடகைச் சட்டத்தின் மூலம் அனைத்து முரண்பாடுகளும் நீக்கப்பட்டு, அனைத்து குழப்பங்களும் தெளிவுபடுத்தப்பட்டு ரியல் எஸ்டேட் துறைக்கு பெரிய அளவில் ஊக்கம் கிடைக்கும் என்றும் மிஸ்ரா கூறினார்.

ALSO READ: IIT, NIT-களில் அடுத்த ஆண்டு முதல் தாய் மொழியில் பொறியியல் படிப்புகள்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News