நிர்பயா வழக்கில் புதிய மரண உத்தரவு; 4 பேருக்கு பிப்ரவரி 1ம் தேதி தூக்கு

நிர்பயா கற்பழிப்பு வழக்கில் குற்றவாளியான நான்கு பேருக்கு எதிராக புதிய மரண உத்தரவு. பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிடப்படுவார்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 17, 2020, 06:18 PM IST
  • நிர்பயா கும்பல் கற்பழிப்பு வழக்கின் குற்றவாளிகள் பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிடப்படுவார்கள்.
  • நிர்பயா வழக்கில் தில்லி நீதிமன்றம் இன்று புதிய மரண உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • குற்றவாளிகள் ஜனவரி 22 ஆம் தேதி தூக்கிலிடப்பட இருந்தனர், அதன் தேதி நீட்டிப்பு.
  • ஒரு குற்றவாளி கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார்.
நிர்பயா வழக்கில் புதிய மரண உத்தரவு; 4 பேருக்கு பிப்ரவரி 1ம் தேதி தூக்கு title=

புது டெல்லி: நிர்பயா கற்பழிப்பு வழக்கில் குற்றவாளியான முகேஷ்குமாரின் கருணை மனுவுக்குப் பிறகு, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் அனைத்து குற்றவாளிகளுக்கும் எதிராக புதிய மரண உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது இந்த நான்கு பேரும் பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிடப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக நான்கு பேரும் ஜனவரி 22 ஆம் தேதி தூக்கிலிடப்படவிருந்தார்கள். ஆனால் நான்கு பேரில் ஒரு குற்றவாளி கருணை மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவரின் கருணை மனுவை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் நிராகரித்தார். மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் கருணை மனு அளிததால், அதன் பிறகு மரண தண்டனை குறித்து ஒரு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், தூக்கு தண்டனை தேதியை நீட்டிக்க வேண்டியிருந்தது.

நிர்பயாவின் தாயார் கூறினார் தேதி.. தேதி.. தேதி...
புதிய மரண உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர், குற்றவாளிகள் தூக்கிலிடப்படும் வரை எங்களுக்கு நிம்மதி கிடைக்காது என்று நிர்பயாவின் தாய் ஆஷா தேவி கூறினார். அவர் நீதிமன்றத்திற்கு வெளியே ஊடகவியலாளர்களிடம் பேசுகையில், "குற்றவாளிகள் விரும்பியவை நடக்கிறது.... தேதி தேதி, தேதி தேதி. குற்றவாளிகளின் கோரிக்கை கேட்கப்படும் இடத்தில் எங்கள் அமைப்பு உள்ளது எனக் கூறினார்.

புதிய மரண உத்தரவுக்காக முறையிட்ட திகார் நிர்வாகம்:
முன்னதாக, திஹார் சிறை அதிகாரிகள் மரண தண்டனை தொடர்பாக குற்றவாளிகளுக்கு எதிராக மரண உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றத்தில் முறையிட்டனர். நிர்பயா வழக்கில் நான்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங், ஜனாதிபதி தனது கருணை மனுவை நிராகரித்தாரா என்பது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதா என்று கூடுதல் அமர்வு நீதிபதி நீதிபதி சதீஷ்குமார் அரோரா மாலை 4.30 மணிக்குள் நீதிமன்றத்தில் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டார். முகேஷின் கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெள்ளிக்கிழமை நிராகரித்ததாக அரசு வழக்கறிஞர் இர்பான் அகமது நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய உயர் நீதிமன்றம்:
அண்மையில் நிர்பயா வழக்கின் விசாரணையின் போது, ​​உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. உண்மையில், மரண தண்டனை முகேஷ் குமார் சிங் மனுவை நீதிமன்றம் விசாரித்தது. இதில், தூக்கிலிட நிர்ணயிக்கப்பட்ட ஜனவரி 22 தேதியை ஒத்திவைக்குமாறு அவர் கோரியிருந்தார். புதன்கிழமை, டெல்லி அரசாங்கமும் சிறை நிர்வாகமும் தில்லி உயர்நீதிமன்றத்தில் ஜனவரி 22 ஆம் தேதி தூக்கிலிட முடியாது என்று கூறியது. ஏனெனில் ஒரு குற்றவாளி கருணை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார், மேலும் அவரது மனு நிராகரிக்கப்பட்டால், விதியின் கீழ் புதிய மரண உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது வேண்டும்.

நீதிமன்றம், "அனைத்து குற்றவாளிகளும் கருணை மனுவைப் பயன்படுத்தும் வரை நீங்கள் நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால், உங்கள் விதிகள் மோசமானவை" என்று கூறியிருந்தது. விதிகளை உருவாக்கும் போது யாரும் மூளைகளைப் பயன்படுத்தவில்லை என்று தெரிகிறது. இந்த அமைப்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளது எனவும் நீதிபதிகள் கூறினார்கள். 

23 டிசம்பர் 2012 அன்று, 23 வயதான துணை மருத்துவ மாணவர் நிர்பயா, நகரும் பேருந்தில் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டார் என்பதை உங்களுக்கு நினைவுப்படுத்துகிறோம். சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த சம்பவத்திற்கு 13 நாட்களுக்குப் பிறகு அவர் இறந்தார். இந்த வழக்கு நாடு முழுவதையும் உலுக்கியது. இதன் பின்னர், சட்டத்தை கடுமையாக்க அரசாங்கம் கட்டாயப்படுத்தப்பட்டது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News