பாட்னா : பீகார் மாநிலம் சிசானி கிராமத்தை சேர்ந்தவர் கூலிதொழிலாளி விபின் சவுகான். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் இணைவதற்காக வேண்டி வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு சென்று கணக்கு தொடங்க விரும்பினார்.
அந்த சேவை மைய அலுவலர், விபின் சவுகானின் ஆதார் எண்ணை பதிவு செய்து வங்கி கணக்கு தொடங்க முற்பட்டபோது, அவர் பெயரில் ஏற்கனவே வங்கி கணக்கு இருந்தது தெரியவந்தது. மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் சேர வந்த கூலி தொழிலாளி பெயரில் வங்கி கணக்கில் ரூ.9 கோடியே 99 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டிருப்பது கண்டு திகைத்தார்.
முதல் முறையாக வங்கி கணக்கு தொடங்க விரும்பிய தனக்கே தெரியாமல் தன்னுடைய பெயரில் வங்கி கணக்கு தொடங்கி அதில் ரூ.9.99 கோடி டெபாசிட் செய்யப்பட்டது கண்டு சவுகானும் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டு சவுகான் தெரிவித்தார். சவுகான் பெயரில் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு, 2017-ம் ஆண்டு பிப்ரவரி வரை கோடிக்கணக்கில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது.
ஆனால், சவுகான் பெயரில் உள்ள வங்கி கணக்கில் அவரின் புகைப்படம், கைரேகை, கையொப்பம் என எதுவுமே இல்லை. ஆதார் கார்டு எண் மட்டுமே அவருடையதாக இருந்தது. இதுகுறித்து வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், “சவுகான் புகார் அளித்ததும் வங்கி கணக்கை முடக்கி விட்டோம். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம்” என தெரிவித்தார்.
ALSO READ பழிவாங்க பல கிலோமீட்டர் கடந்து வந்த குரங்கு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR