நாடுமுழுவதும் 8-ஆம் வகுப்பு வரை கட்டாயம் இந்தி பாடம் கற்பிக்கப்பட வேண்டும் என பரவிவரும் செய்திகள் உண்மை அல்ல என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவுடேகர் தெரிவித்துள்ளார்!
நாடுமுழுவதும் 8-ஆம் வகுப்பு வரை மாநில மொழி, ஆங்கிலத்துடன், இந்தி மொழியையும் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என பள்ளி கல்வி பாடத்திட்டம் குறித்து ஆய்வு செய்த கே.கஸ்தூரி ரங்கன் கமிட்டி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு பரிந்துரைத்துள்ளது என தகவல்கள் வெளியானது.
Union HRD Minister, Prakash Javadekar on reports of recommendation making Hindi language compulsory until Class 8 in schools across the country: There’s no provision of making any language compulsory in National Education Policy draft. The news in the media is wrong. pic.twitter.com/im24sd8Srj
— ANI (@ANI) January 10, 2019
மேலம் நாடுமுழுவதிலும் உள்ள தொடக்க பள்ளிகள் முதல் நடுநிலை பள்ளிகள் வரை பாடத்திட்டங்களில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக ஆய்வு செய்வதற்காக கஸ்தூரி ரங்கன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை நியமித்துள்ளது. இந்த குழு ஆய்வு நடத்தி தனது அறிக்கையினை மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளதாகவும், அதில் நாடுமுழுவதும் 8-ஆம் வகுப்பு வரை இந்தி பாடத்தை கட்டாயமாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
இதனையடுத்து மாநிலங்கள் அளவில் சர்ச்சைகள் எழுந்த நிலையில், இதுகுறித்து மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவுடேகர் விளக்கம் அளித்துள்ளர். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., தேசிய பாட திட்டத்தில் இந்தி பாடத்தை கட்டாயமாக்குவது குறித்து எந்த முன் ஏற்பாடும் எடுக்கப்படவில்லை, ஊடகங்களில் பரவி வரும் தகல்கள் தவறானது என குறிப்பிட்டுள்ளார்.