ஜெகநாதர் ரத யாத்திரை 2020: மணல் சிற்பம் உருவாக்கி இறைவனுக்கு சுதர்சன் பட்நாயக் வாழ்த்து

புகழ்பெற்ற பூரி ஜெகந்நாத் ரத யாத்திரை தேர் விழா என்றும் அழைக்கப்படுகிறது.

Last Updated : Jun 23, 2020, 01:55 PM IST
    1. ரத யாத்திரை 15 நாள் நடக்கும் திருவிழாவாகும்.
    2. புகழ்பெற்ற பூரி ஜெகந்நாத் ரத யாத்திரை, தேர் விழா என்றும் அழைக்கப்படுகிறது.
    3. சுதர்சன் பட்நாயக் தனது கைவண்ணத்தில் பூரி கடற்கரையில் மணல் சிற்பத்தை உருவாக்கி உள்ளார்.
ஜெகநாதர் ரத யாத்திரை 2020: மணல் சிற்பம் உருவாக்கி இறைவனுக்கு சுதர்சன் பட்நாயக் வாழ்த்து

புதுடெல்லி: ஒடிசாவின் பூரியில் மிகவும் மதிக்கப்படும் ஜெகந்நாத் ராத் யாத்திரை இன்று தொடங்குகிறது. கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல், கடுமையான கட்டுப்பாடுகளுடன் ரத யாத்திரையை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

கொடிய தொற்றுநோயையும், சமூக தூரத்தை கடைப்பிடிப்பதன் மூலம் அதை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியத்தையும் அடுத்து இந்த முடிவு வந்தது.

புகழ்பெற்ற பூரி ஜெகந்நாத் ரத யாத்திரை, தேர் விழா என்றும் அழைக்கப்படுகிறது. புவனேஸ்வரைச் சேர்ந்த சர்வதேச மணல்சிற்பக் கலைஞரும் பத்ம ஸ்ரீ விருது பெற்றவருமான சுதர்சன் பட்நாயக் தனது கைவண்ணத்தில் பூரி கடற்கரையில் மணல் சிற்பத்தை உருவாக்கி உள்ளார். ஜெகநாதர் (பகவான் விஷ்ணு), அவரின் சகோதரர் பாலபத்ரா, சகோதரி தேவி சுபத்ரா ஆகிய சிற்பங்களுடன், அவர்கள் எழுந்தருள உள்ள தேர்களின் மாதிரியையும் சுதர்சன் பட்நாயக் மணல்சிற்பமாக உருவாக்கியிருக்கிறார். இந்த சிற்பங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இறைவனின் அழகான மணல் கலை படைப்புகளையும் தேர் திருவிழாவையும் பாருங்கள்:

 

 

 

 

 

 

 

 

இதனை புகைப்படம் எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘ஜெய் ஜெகந்நாத்! ரதயாத்திரை நடைபெறும் புனித நாளான இன்று பகவான் ஜெகநாதர் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக! அனைவரும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன் இருக்க மகாபிரபு (ஜெகநாதர்) ஆசீர்வதிப்பார்’ என்று கூறி உள்ளார். 

ரத யாத்திரை 15 நாள் நடக்கும் திருவிழாவாகும். இது இந்த ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி விழும் ஆஷாதா மாதத்தின் சுக்ல பட்சம் போது துவிதியை திதியில் தொடங்குகிறது. டிரிக்பஞ்சாங்கின் கூற்றுப்படி, துவிதியை திதி ஜூன் 22 காலை 11:59 மணிக்கு தொடங்கி ஜூன் 23 காலை 11.19 மணிக்கு முடிவடையும்.

ஒடிசா மாநிலத்தின் இந்துப் பண்டிகைகளில் பூரி ரத யாத்திரை உலகப் புகழ் பெற்றது. ரத யாத்திரை ஆண்டு தோறும் ஆடி மாதம் இரண்டாம் நாள் துவங்கி தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெறும். தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு, 16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, மஞ்சள் நிறத் தேரில் உற்சவ மூர்த்தியான பூரி ஜெகன்நாதரும், 14 சக்கரங்களை கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய தேரில் பலபத்திரரும் 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கறுப்பு நிறத் தேரில் சுபத்ரா தேவியும் எழுந்தருள்வர். முதலில் பலபத்திரர் தேரும், அதன் பின்னர் சுபத்ரா தேவி எழுந்தருளிய தேர்கள் புறப்பட்ட பின்பு, இறுதியாக ஜெகன்நாதர் எழுந்தருளிய தேர் புறப்படும்.

முக்கியத்துவம் மற்றும் சடங்குகள்:

பாரம்பரிய வழக்கப்படி, தேரோடும் 'ரத்ன வீதி'யைத் தங்கத் துடைப்பத்தால் பூரி நகர மன்னர் கஜபதி பெருக்கிச் சுத்தம் செய்வார். குண்டிச்சா கோவில் நோக்கிச் செல்லும் ரத யாத்திரியின் ஒரு பகுதியாக, வழியில் உள்ள மவுசிமா கோவிலில் ஜெகன்நாதர் ஓய்வு எடுப்பார். அங்கிருந்து மீண்டும் தேர்கள் புறப்பட்டு பூரி ஜெகன்நாதர் கோயிலை வந்தடையும். தேரோட்டத்திற்காக ஆண்டுதோறும் புதிய மரத்தேர்கள் செய்யப்படுகிறது. தேரோட்டத்திற்காக ஆண்டுதோறும் 45 அடி உயரமும் 35 அடி அகலமும் கொண்ட புதிய தேர் மரத்தால் கட்டப்படுகிறது.

More Stories

Trending News