பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதலில் உயிரிழந்த பி.எஸ்.எஃப் தலைமை கான்ஸ்டபிள் ஜக்பால் சிங் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு தொகையை முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் சர்வதேச எல்லை அருகே பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று முன்தினம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் பி.எஸ்.எஃப் தலைமை கான்ஸ்டபிள் ஜக்பால் சிங் என்பவர் உயிரிழந்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ் புரா செக்டார் பகுதியில் சர்வதேச எல்லை அருகே பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று முன்தினம் இந்திய நிலைகளை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். சிறிய ரக மோட்டார் குண்டுகளையும் அவர்கள் தாக்குதலில் பயன்படுத்தினர்.
தொடர்ந்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தவே அந்த இடத்தில் வசித்து வந்த பொதுமக்கள் இரண்டு பேர் மற்றும் பி.எஸ்.எஃப் தலைமை கான்ஸ்டபிள் ஜக்பால் சிங் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், 24 நான்கு பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்கான மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதலில் உயிரிழந்த பி.எஸ்.எஃப் தலைமை கான்ஸ்டபிள் ஜக்பால் சிங் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு தொகையை முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று அறிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் சர்வதேச எல்லை அருகே பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்துவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இதேபோன்று,நேற்று முன்தினம் அதே பகுதியில் பாக்கிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார் மற்றொரு வீரர் மற்றும் கிராம மக்கள் காயமடைந்தனர் என்பது குறிபிடத்தக்கது.
UP CM Yogi Adityanath announces compensation of Rs 25 lakh to the kin of late BSF head Constable Jagpal Singh, he lost his life yesterday, in ceasefire violation by Pakistan in Samba Sector of J&K
— ANI UP (@ANINewsUP) January 20, 2018