இன்றைய விலையில் மாற்றமில்லாத பெட்ரோல், டீசல் விலை....

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ரூ.84.05-க்கும் டீசல் ரூ.77.13-க்கும் விற்பனை செய்யப்படுகிறது...! 

Last Updated : Sep 12, 2018, 08:43 AM IST
இன்றைய விலையில் மாற்றமில்லாத பெட்ரோல், டீசல் விலை.... title=

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ரூ.84.05-க்கும் டீசல் ரூ.77.13-க்கும் விற்பனை செய்யப்படுகிறது...! 

பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து சாதாரண மக்களையும், வாகன ஓட்டிகளையும் வதைத்து வருகிற நிலையில், இது தொடர்பாகவோ, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பற்றியோ பிரதமர் நரேந்திர மோடியும் சரி, பிற மத்திய மந்திரிகளும் சரி வாய் திறக்காமல் மவுனம் காத்து வருவது எதிர்க்கட்சிகளின் சாடலுக்கு வழி வகுத்து உள்ளது.

கடந்த சில நாட்களாக தினந்தோறும் விலை ஏற்றத்தை சந்தித்து புதிய உச்சத்தை எட்டிய பெட்ரோல், டீசல் விலை இன்று எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.05 காசுகளும், டீசல் ஒரு லிட்டர் ரூ.77.13 க்கும் விற்பனையாகிறது. 

மேலும் விவரங்களுக்கு:- https://www.iocl.com/home.aspx

 

Trending News