கொல்கத்தா: பிளாஸ்டிக் பையில் குழந்தையின் எலும்புகள்?

கொல்கத்தாவில் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டிருந்த 14 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

Last Updated : Sep 3, 2018, 08:56 AM IST
கொல்கத்தா: பிளாஸ்டிக் பையில் குழந்தையின் எலும்புகள்?  title=

கொல்கத்தாவில் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டிருந்த 14 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

ஹரிதேவ்பூரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று எடுத்து புதிதாக வாங்கிய இடம் ஒன்றைச் சுத்தம் செய்யுமாறு வேலையாட்களைப் பணித்தது. ஞாயிறன்று பிற்பகல் அவர்கள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் 14 குழந்தைகளின் எலும்புக் கூடுகளைக் கண்டறிந்த வேலையாட்கள் அதிர்ச்சியடைந்தனர். எலும்புக் கூடுகளைக் கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதைத் தொடர்ந்து, கமிஷ்னர், துணை கமிஷ்னர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அந்த பாக்கெட்களை மருத்துவமனைக்கு அனுப்பி, உடல்களை பிரேத பரிசோதனை செய்யவுள்ளதாக துணை கமிஷ்னர் நிலஞ்சன் பிஸ்வாஸ் தெரிவித்தார். 

இந்நிலையில், மருத்துவ பரிசோதனையில், அந்த பாக்கெட்களில் இருந்தவை சிசுக்களின் உடல்கள் கிடையாது என்றும், மருத்துவ கழிவுகள் தான் என்றும் தெரிய வந்துள்ளதாக அவர் நேற்று இரவு உறுதி செய்தார். பெரும்பாலான ஊடகங்களில் வெளியான இந்த தவறான செய்தியால், சிறிது நேரத்திற்கு கொல்கத்தாவில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

 

Trending News