பிரதமர் மோடி யு.எஸ் வருகையை முடித்தார், விதிவிலக்கான விருந்தோம்பலுக்கு அமெரிக்கர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!!
பிரதமர் நரேந்திர மோடி தனது US வருகையை முடித்தார், அமெரிக்க மக்களுக்கு "விதிவிலக்கான வரவேற்பு, அரவணைப்பு மற்றும் விருந்தோம்பல்" ஆகியவற்றிற்கு நன்றி தெரிவித்ததோடு, தங்கியிருந்த காலத்தில் அவர் கலந்து கொண்ட பல்வேறு வகையான நிகழ்ச்சிகளும் இந்தியாவுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று கூறினார்.
வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் பிரதமர் தனது சிறப்பு விமானத்தில் ஏறும் இரண்டு புகைப்படங்களை ட்வீட் செய்துள்ளார்.
PM @narendramodi winds up a visit filled with many highlights.
From the cheers of ‘Howdy Modi’ to the resounding global appreciation of India’s efforts to find solutions to global challenges, a week well done! pic.twitter.com/wgwFOjrWsA
— Raveesh Kumar (@MEAIndia) September 27, 2019
ஐநா சபைக் கூட்டத்தில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, இந்தியா திரும்புவதற்கு முன்பாக பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேச்சு நடத்தினார். கிரீஸ் பிரதமர் கைரியாகோஸ் மிட்சோடாகிஸ் (Kyriakos Mitsotakis) பிரதமர் மோடியை சந்தித்தார். இதே போல் பூட்டான் பிரதமர் லோட்டே ஷெரிங்குடனும் (Lotay Tshering) மோடி இருதரப்பு உறவுகள் குறித்து உரையாடினார்.
வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசினாவை மோடி சந்தித்தபோது, தீவிரவாதத்தை சகித்துக் கொள்வதில்லை என இருதலைவர்களும் உறுதி ஏற்றுக் கொண்டனர். இரு நாடுகளிடையே பரஸ்பர நம்பிக்கையையும் நட்பையும் வலுப்படுத்துவது குறித்தும் பேச்சு நடத்தினர். வங்கதேசத்தின் தந்தையென அழைக்கப்படும் முஜிபுர் ரகுமான் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க ஹசீனா அழைப்பு விடுக்க, அதனை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்.
தொடர்ந்து அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம் பெண் துளசி கப்பார்ட்டுடன் பிரதமர் மோடி பேச்சு நடத்தினார். அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்திய நேரப்படி அதிகாலை 2 மணியளவில் நியூயார்க்கில் இருந்து புறப்பட்டார். விமான நிலையத்தில் பிரதமரை தூதரக அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். ஜெர்மனியின் பிராங்க்பர்ட் வழியாக இன்று இரவு பிரதமர் டெல்லி வந்து சேருவார்.