SIP Vs PPF Vs ELSS... கோடீஸ்வரர் ஆக உதவும் சிறந்த முதலீடு எது...முழு கணக்கீடு இதோ

SIP Vs PPF Vs ELSS: இன்றைய காலகட்டத்தில்,  முதலீட்டாளர்கள் அனைவருமே, குறைந்த காலத்தில் பணம் பனமடங்காக வேண்டும் என்றே விரும்புகிறார்கள்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 24, 2024, 04:49 PM IST
  • ஒரு நபர் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் முதலீடு செய்வதன் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கும்?
  • முதலீட்டாளர்கள் அனைவருமே, குறைந்த காலத்தில் பணம் பனமடங்காக வேண்டும் என்றே விரும்புகிறார்கள்.
  • SIP, PPF மற்றும் ELSS ஆகியவற்றில் எந்தத் திட்டம் குறைந்த கால கட்டத்தில், உங்களை கோடீஸ்வரராக ஆக்கும்?
SIP Vs PPF Vs ELSS... கோடீஸ்வரர் ஆக உதவும் சிறந்த முதலீடு எது...முழு கணக்கீடு இதோ title=

SIP Vs PPF Vs ELSS: இன்றைய காலகட்டத்தில்,  முதலீட்டாளர்கள் அனைவருமே, குறைந்த காலத்தில் பணம் பனமடங்காக வேண்டும் என்றே விரும்புகிறார்கள்.  பரஸ்பர நிதியம் என்னும் எஸ் ஐ பி பலரின் தேவாக உள்ளது.  ELSS  எனப்படும் பங்கு சந்தை முதலீடுகளும் அதிகம் செய்யப்படுகின்றன. PPF என்னும் சிறு சேமிப்பு திட்டம் மிகவும் பாதுகாப்பன முதலீடுத் திட்டம். இந்நிலையில், SIP, PPF மற்றும் ELSS ஆகியவற்றில் எந்தத் திட்டம் குறைந்த கால கட்டத்தில், உங்களை கோடீஸ்வரராக ஆக்கும் முதலீட்டுத் திட்டம் எது என்பதை அறிந்து கொள்ளலாம். ஒரு நபர்  ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் முதலீடு செய்வதன் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்ற கணக்கைப் புரிந்துகொள்வோம்.

15 வருடங்களுக்கு ரூ.1.5 லட்சம் என்ற அளவில் தொடர் முதலீடு செய்தால் கிடைக்கும் வருமானம்

1. PPF (பொது வருங்கால வைப்பு நிதி)

ஆண்டு முதலீடு: ₹1.5 லட்சம்
வட்டி விகிதம்: 7.1% 
முதலீட்டு காலம்: 15 ஆண்டுகள்
15 ஆண்டுகளில் மொத்த முதலீடு: ₹22.5 லட்சம்
15 ஆண்டுகளில் வருமானம்: ₹40.7 லட்சம்
ஒரு கோடி நிதியை உருவாக்க எடுத்துக் கொள்ளும் காலம்: சுமார் 25 ஆண்டுகள்

2. SIP (பரஸ்பர நிதியில் செய்யப்படும் முறையான முதலீட்டுத் திட்டம்)

ஆண்டு முதலீடு: ₹1.5 லட்சம்
ஆண்டு சராசரி வருவாய் (CAGR): 12%
முதலீட்டு காலம்: 15 ஆண்டுகள்
15 ஆண்டுகளில் மொத்த முதலீடு: ₹22.5 லட்சம்
15 ஆண்டுகளில் வருமானம்: ₹59.35 லட்சம்
ஒரு கோடி நிதியை உருவாக்க எடுத்துக் கொள்ளும் காலம்: சுமார் 20 ஆண்டுகள்

3. ELSS (ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டம்)

ஆண்டு முதலீடு: ₹1.5 லட்சம்
சராசரி வருவாய் (CAGR): 14%
முதலீட்டு காலம்: 15 ஆண்டுகள்
15 ஆண்டுகளில் மொத்த முதலீடு: ₹22.5 லட்சம்
15 ஆண்டுகளில் வருமானம்: ₹66.92 லட்சம்
கோடீஸ்வரர் ஆவதற்கான நேரம்: சுமார் 18 ஆண்டுகள்

மேலும் படிக்க | ரூ.10,000 SIP மூலம் ரூ.1 கோடி கார்பஸ் சேர்க்க எவ்வளவு காலம் ஆகும்? முழு கணக்கீடு இதோ

SIP, PPF மற்றும் ELSS போன்றவற்றில் நீங்கள் ஆண்டுக்கு ₹ 1.5 லட்சம்  என்ற அளவில் 30 ஆண்டுகளுக்கு தொடர் முதலீடு செய்தால், கிடைக்கும் வருமானம்

1. PPF (பொது வருங்கால வைப்பு நிதி)

ஆண்டு முதலீடு: ₹1.5 லட்சம்
முதலீட்டு காலம்: 30 ஆண்டுகள்
வட்டி விகிதம்: 7.1% (நிலையானதாகக் கருதப்படுகிறது)
மொத்த முதலீடு: ₹45 லட்சம்
30 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும் மொத்த வருமானம்: ₹1.54 கோடி

2. SIP (முறையான முதலீட்டுத் திட்டம்)

ஆண்டு முதலீடு: ₹1.5 லட்சம்
முதலீட்டு காலம்:  30 ஆண்டுகள்
சராசரி வருவாய் (CAGR): 12%
மொத்த முதலீடு: ₹45 லட்சம்
30 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும் மொத்த வருமானம்: ₹5.27 கோடி

3. ELSS (ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டம்)

ஆண்டு முதலீடு: ₹1.5 லட்சம்
சராசரி வருவாய் (CAGR): 14%
மொத்த முதலீடு: ₹45 லட்சம்
30 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும் மொத்த வருமானம்: ₹8.11 கோடி

SIP Vs PPF Vs ELSS: ஒரு ஒப்பீடு

PPF: மிகவும் பாதுகாப்பான முதலீடு ஆனால் வருமானம் குறைவாகவே உள்ளது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு ₹1.54 கோடி ரூபாய் உங்கள் கையில் இருக்கும்.

SIP: இது அதிக வருமானம் அதிகம் கொடுக்கும் சிறந்த முதலீடு.  இதன் மூலம் ₹5.27 கோடி வரை கார்பஸை உருவாக்க முடியும்.

ELSS: இது வரிச் சேமிப்புடன் கூடிய வேகமான வளர்ச்சியை கொடுக்கும் முதலீடு. 30 ஆண்டுகளில் ₹ 8.11 கோடி வரை பெறலாம்.

உங்கள் முதலீட்டுத் தேர்வு உங்கள் இலக்குகள் மற்றும் ரிஸ்க் எடுக்க நீங்கள் எந்த அளவு தயாராக இருக்கிறீர்கள் என்பதை பொறுத்தது. ELSS மற்றும் SIP சிறந்த வருமானத்தை அளிக்கின்றன, ஆனால் அவை சந்தை அபாயங்களைக் கொண்டுள்ளன. PPF என்பது குறைந்த வருமானத்துடன் பாதுகாப்பான விருப்பமாகும். கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்பதே உங்கள் இலக்காக இருந்தால், ELSS மற்றும் SIP உங்கள் இலக்கை வேகமாக அடையும். நீண்ட காலத்திற்கு PPF ஒரு பாதுகாப்பான வழி, ஆனால் கோடி ரூபார் கார்பஸ் உருவாக அதிக நேரம் எடுக்கும்.

மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்: மத்திய அரசின் 1 எச்சரிக்கை, 2 குட் நியூஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News