மைத்ரி மூவி மேக்கர்ஸ் பேனரின் கீழ் நவீன் யெர்னேனி மற்றும் ரவிசங்கர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் புஷ்பா : தி ரூல். சுகுமார் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தின் முதல் பாகம் 2021ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து புஷ்பா படத்தின் 2ம் பாகம் தற்போது வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிக மந்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஃபஹத் ஃபாசில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் சுனில், ராவ் ரமேஷ், பிரம்மாஜி மற்றும் ஜெகதீஷ் பிரதாப் போன்ற முக்கிய நடிகர்கள் படத்தில் உள்ளனர். புஷ்பா 2 படத்திற்கு குபா ப்ரோஜெக் ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருது பெற்ற எடிட்டர் நவீன் நூலி எடிட்டிங் செய்துள்ளார்.
மேலும் படிக்க | தன்னை பற்றிய வீடியோக்களை உடனே நீக்க வேண்டும்! ஏஆர் ரகுமான் நோட்டீஸ்!
பல ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்ட போதிலும் புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி கொண்டே போனது. இந்நிலையில் ஒருவழியாக டிசம்பர் 5ம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாக உள்ளது. தற்போது படக்குழு இந்தியா முழுவதும் புரமோஷனல் வேலைகளில் பிசியாக உள்ளனர். வட இந்தியாவில் பிரமாண்ட முறையில் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ் மக்களிடம் படத்தை கொண்டு சேர்க்கும் விதமாக சென்னையில் புஷ்பா 2: தி ரூல் படத்தின் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா கலந்து கொண்டனர். இந்நிலையில் நிகழ்ச்சி மேடையில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தயாரிப்பாளர்கள் மீது குற்றச்சாட்டு
புஷ்பா 2 படத்தில் வேலை பார்த்த அனுபவத்தைப் பற்றி பேசிய இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தனக்கும் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை உறுதிப்படுத்தினார். “தயாரிப்பாளர்களிடமிருந்து பணம் பெற்றாலும் அல்லது படத்தில் கிரெடிட்டாக இருந்தாலும், நமக்கு என்ன வேண்டும் என்று கேட்டு பெற வேண்டும். புஷ்பா படத்தின் தயாரிப்பாளர் ரவிக்கு என்ன பிரச்சனை என்று எனக்கு புரியவில்லை. அவர் என்னைப் பற்றி எப்போதும் விமர்சிப்பார். நான் சரியான நேரத்தில் படத்திற்கு இசையை வழங்கவில்லை, சரியான நேரத்தில் புரமோஷனுக்கு வரவில்லை என்று கூறுகிறார். இந்த நிகழ்ச்சிக்கு கூட நான் சீக்கிரம் வந்துவிட்டேன்" என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.
புஷ்பா 2 படத்திற்கு பின்னால் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பின் இடையில் நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குனர் சுகுமார் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்பட்டது. பிறகு இருவரையும் சமாதானப்படுத்தி தயாரிப்பாளர்கள் படத்தை முடித்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான தகவலின்படி, தேவி ஸ்ரீ பிரசாத சரியான நேரத்தில் புஷ்பா 2 படத்திற்கு பின்னணி இசை மற்றும் பாடல்களை தரவில்லை என்று கூறி, தயாரிப்பாளர்கள் எஸ் தமன் மற்றும் அஜனீஷ் லோக்நாத் ஆகியோரை புஷ்பா 2 படத்தில் சேர்த்து கொண்டுள்ளதாக கூறப்பட்டது. மேலும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் அஜித் படத்தில் இருந்தும் டிஎஸ்பி நீக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் தான் மேடையில் இப்படி அவர் பேசியதாக படக்குழுவில் பணியாற்றிய சிலர் கூறுகின்றனர்.
அல்லு அர்ஜுன் ஆதரவு
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பேச்சுக்கு பிறகு பேசிய அல்லு அர்ஜுன் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. புஷ்பா 2ல் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையால் முற்றிலும் ஈர்க்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். “நான் 20 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன், அவற்றில் 10 படங்களுக்கு டிஎஸ்பி தான் இசையமைத்துள்ளார். என் ராக்ஸ்டார், என் பால்ய நண்பர் அவர். இந்தியாவில் உள்ள மிகப்பெரிய இசையமைப்பாளர்களில் ஒருவர் டிஎஸ்பி. நீங்கள் இல்லாமல் இந்த படம் சாத்தியமில்லை, நீங்கள் இல்லாமல் எனது பயணமும் சாத்தியமில்லை” என்று அல்லு அர்ஜுன் கூறினார்.
மேலும் படிக்க | “என் அப்பா அப்படிப்பட்டவர் இல்லை” ஏ.ஆர்.ரஹ்மான் மகன் போட்ட பரபரப்பு பதிவு!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ