அடலின் கனவு நிறைவேறியது: மணாலி சுரங்க பாதையை திறைந்து வைத்த PM Modi

இமயமலையின் பிர் பஞ்சால் மலைத்தொடரில்,  அதி நவீன தொழில்நுபங்களுடன், இந்த சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது, இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,000 மீட்டர் (10,000 அடி) உயரத்தில் உள்ளது.

Written by - ZEE Bureau | Last Updated : Oct 3, 2020, 12:35 PM IST
  • இமயமலையின் பிர் பஞ்சால் மலைத்தொடரில், அதி நவீன தொழில்நுபங்களுடன், இந்த சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது, இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,000 மீட்டர் (10,000 அடி) உயரத்தில் உள்ளது.
  • 9.02 கி.மீ தூரம் அமைந்துள்ள இந்த சுரங்க பாதை, இது உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை என்று கூறப்படுகிறது.
  • முன்னதாக, கடுமையான பனிப்பொழிவு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஆறு மாதங்களுக்கு பள்ளத்தாக்கு பிறகு பகுதியில் இருந்து துண்டிக்கப்பட்டிருக்கும்.
அடலின் கனவு நிறைவேறியது: மணாலி சுரங்க பாதையை திறைந்து வைத்த PM Modi

மணாலியை லஹால்-ஸ்பிட்டி பள்ளத்தாக்குடன் இணைக்கும் அடல் சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

இமாச்சலப் பிரதேசத்தின் ரோஹ்தாங்கில் அடல் சுரங்கப்பாதையை சனிக்கிழமை (அக்டோபர் 03, 2020) காலை சுமார் 10 மணிக்கு, பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi) திறந்து வைத்தார். இந்த சுரங்கம் மணாலியை லஹால்-ஸ்பிட்டி பள்ளத்தாக்குடன் இணைக்கும். 

சுரங்க பாதையை தொடக்கி வைக்கும் நிகழ்ச்சியில், பிரதமருடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath Singh), பாதுகாப்புப் படைத் தலைவர் (CDS) ஜெனரல் பிபின் ராவத் (General Bipin Rawat), ராணுவத் தலைவர் ஜெனரல் எம்.எம்.நாரவனே (MM Naravane) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, லஹொல் ஸ்பிதி பள்ளத்தாக்கில் உள்ள சிசுவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

இமயமலையின் பிர் பஞ்சால் மலைத்தொடரில்,  அதி நவீன தொழில்நுபங்களுடன், இந்த சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது, இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,000 மீட்டர் (10,000 அடி) உயரத்தில் உள்ளது.

9.02 கி.மீ தூரம் அமைந்துள்ள இந்த சுரங்க பாதை, இது உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை என்று கூறப்படுகிறது. இது மணாலியை லஹால்-ஸ்பிட்டி பள்ளத்தாக்குடன் இணைக்கும் என்பதோடு, ஆண்டு முழுவதும், அதாவது கடும் குளிரிலும் இந்த பாதையை பயன்படுத்த இயலும். முன்னதாக, கடுமையான பனிப்பொழிவு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஆறு மாதங்களுக்கு பள்ளத்தாக்கு பிறகு பகுதியில் இருந்து துண்டிக்கப்பட்டிருக்கும்.

இந்த சுரங்கப்பாதை, மூலம், பயண தூரம் 46 கிலோமீட்டர் அளவில் குறைக்கிறது என்பதோடு, பயண நேரம் கிட்டத்தட்ட நான்கு முதல் ஐந்து மணி நேரம் அளவில் குறைகிறது.

பிரதமர் நரேந்திர மோடி, இதன் கட்டுமானப் பணிகள், தள அமைப்பு மற்றும் சுரங்கப்பாதை தொடர்பான பிற விவரங்கள் குறித்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராணுவ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
ALSO READ | Loan Moratorium: கடன் தவணை சலுகையில் வட்டிக்கு வட்டி செலுத்துவதிலிருந்து விலக்கு..!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News