ஈஸ்டர் குண்டுவெடிப்புக்குப் பின் இலங்கை சென்ற முதல் தலைவர் மோடி!!

இந்தியாவின் பிரதமராக இலங்கைக்கு மூன்றாவது முறையாக பயணம் செய்யும் மோடி பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒற்றுமை தேவை என்பதை வலியுறுத்துகிறார்!

Updated: Jun 9, 2019, 09:55 AM IST
ஈஸ்டர் குண்டுவெடிப்புக்குப் பின் இலங்கை சென்ற முதல் தலைவர் மோடி!!

இந்தியாவின் பிரதமராக இலங்கைக்கு மூன்றாவது முறையாக பயணம் செய்யும் மோடி பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒற்றுமை தேவை என்பதை வலியுறுத்துகிறார்!

மாலத்தீவு சுற்றுப்பயணத்தை முடித்த பிரதமர் மோடி இன்று காலை இலங்கை சென்றார். இரண்டாவது முறையாக இந்திய பிரதமராக பொறுப்பேற்ற பின் நரேந்திர மோடி, தன் முதல் வெளிநாட்டுப் பயணமாக, தெற்காசிய நாடான, மாலத் தீவுகளுக்கு சென்றுள்ளார் அங்கு அந்நாட்டு தலைவர்கள சந்தித்து மாலத்தீவு பார்லிமென்டிலும் உரையாற்றினார். இதையடுத்து இன்று காலை பிரதமர் மோடி இலங்கை செல்கிறார். அங்கு அதிபர் மைத்ரி பால சிறிசேனா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாயுள்ளது. 

மேலும், இலங்கையில் அண்மையில் ஈஸ்டர் குண்டுவெடிப்புகளில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் மோடி அந்நாட்டு அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்டோரை சந்தித்து பேசுகிறார். மேலும் இலங்கை வாழ் இந்தியர்களுடனும் பிரதமர் மோடி உரையாட உள்ளார். இதனிடையே பிரதமர் மோடியை கொழும்பு கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வரவேற்பது யார் என்பது தொடர்பாக இலங்கை தரப்பில் குழப்பம் நிலவி வருகிறது. விமான நிலையத்தில் பிரதமர் ரணில்தான் மோடியை வரவேற்பார் என்றும் அதிபர் மாளிகையில்தான் சிறிசேனா வரவேற்க உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவித்திருந்தன.

இதையடுத்து, இன்று மாலை 5.10 மணிக்கு, ரேணிகுண்டாவிலிருந்து புறப்பட்டு, கார் மூலம், மாலை 6 மணியளவில் திருப்பதி சென்று ஏழுமலையான் கோவிலில், சுவாமி தரிசனம் செய்கிறார். இரவு 7.20 மணிக்கு திருமலையில் இருந்து புறப்பட்டு, இரவு 8.15 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து புதுடில்லி செல்கிறார். பிரதமரின் வருகையையொட்டி, திருப்பதியில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பதோடு மட்டும் அல்லாது பாதுகாப்பு வாகன ஒத்திகையும் நடைபெற்றது.