நிர்மலா சீதாராமன் அவசர அவசரமாக பிரான்ஸ் பயணம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்ன? ராகுல் காந்தி கேள்வி..
கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி பிரான்சிடம் இருந்து, ரபேல் போர் விமானங்களை வாங்க, ரூ. 58 ஆயிரம் கோடி மதிப்பில் ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில், இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த ஊழல் தொடர்பாக வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா உள்ளிட்டோர், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ‘ஒப்பந்தத்தில் கொள்கை முடிவு எடுக்கப்பட்ட விதம், ஒப்பந்தம் எதன் அடிப்படையில் இறுதி செய்யப்பட்டது உள்ளிட்ட தகவல்களை அளிக்க உத்தரவிட்டது.’
ரஃபேல் விமானம் சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூன்று நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். இந்த திடீர் பயணம் குறித்து ராகுல்காந்தி ட்விட்டரில் விமர்சித்திருந்தார். இதை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், “ ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தையும் இணைத்துக்கொள்ள வேண்டும் இந்திய பிரதமர் கூறியதாக முன்னதாக பிரான்சு முன்னாள் அதிபர் கூறினார். தற்போது, மூத்த அதிகாரி ஒருவரையும் இதையே தெரிவித்துள்ளார்.
எனவே, இதில் ஊழல் விவகாரம் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஏன்? அவசர அவசரமாக ரபேல் தொழிற்சாலைக்கு செல்கிறார்? இதில் ஏன் அவசரம்? நாட்டின் பிரதமர் ஒரு ஊழல் கறைபடிந்தவர் என்பதை நாட்டு இளைஞர்களுக்கு நான் சொல்லிகொள்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Dassault is sitting on a huge contract. Dassault will say what the Indian govt wants it to say. Their internal document clearly stated that PM has said without this compensation the deal will not be done: Congress President Rahul Gandhi #RafaleDeal pic.twitter.com/fTYq7bFZ7L
— ANI (@ANI) October 11, 2018
மேலும் அவர் பேசுகையில், ரபேல் விவகாரத்தில் மோடி ஏன் பதில் அளிக்காமல் அமைதியாக உள்ளார். இந்த விவகாரத்தில் கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்துவதே தீர்வு. பிரதமர் ஊழல் மனிதர் என்பதை இளைஞர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன் அனில் அம்பானயிடம் 30 ஆயிரம் கோடி பணத்தை கொடுத்துள்ளார். எதிர்க்கட்சியினரின் குரலை ஒடுக்க ரெய்டு நடக்கிறது என தெரிவித்துள்ளார்.