அரசியல் ஆட்டம்!! மகாராஷ்டிராவில் Shiv Sena-NCP-Congress ஆட்சி; BJP எதிர்க்கட்சி

மகாராஷ்டிராவில் அரசியல் விளையாட்டு ஆரம்பமாகி உள்ளது. மாநிலத்தில் யார் தலைமையில் ஆட்சி அமையப் போகிறது என்ற பரபரப்பு இன்னும் நீடித்து வருகிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 11, 2019, 01:41 PM IST
  • மகாராஷ்டிரா மாநிலத்தில் யார் தலைமையில் ஆட்சி அமைப்பது என்று 19 நாள் நீடித்த வந்த பரபரப்பு முடிவுக்கு வர வாய்ப்பு.
  • மகாராஷ்டிராவில் அரசாங்கத்தை அமைக்கும் நிலையில் பாஜக இல்லை
  • சிவசேனாவுடன் கூட்டாளியாக எதிர்கால தேர்தலில் போட்டியிட முடியுமா? காங்கிரஸ் கேள்வி
அரசியல் ஆட்டம்!! மகாராஷ்டிராவில் Shiv Sena-NCP-Congress ஆட்சி; BJP எதிர்க்கட்சி title=

மும்பை: காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் நிலையில், சிவசேனா (Shiv Sena) மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி (Nationalist Congress Party) இரண்டும் இணைந்து மகாராஷ்டிராவில் அரசாங்கத்தை அமைக்கத் தயாராகி விட்ட நிலையில், மாநிலத்தில் யார் தலைமையில் ஆட்சி அமைப்பது என்று 19 நாள் நீடித்த வந்த தன்மை முடிவுக்கு வர வாய்ப்புள்ளது. 56 இடங்களில் வெற்றி பெற்ற சிவசேனா மற்றும் 105 இடங்களில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதாவும் கூட்டணி அமைத்து மகாராஷ்டிராவில் தேர்தலை சந்தித்தனர். ஆனால் இந்த கூட்டணியின் வெற்றிக்கு பிறகு சிவசேனாவும் மற்றும் பிஜேபி இடையே ஏற்பட்ட அதிகாரப் பகிர்வு மற்றும் முதலமைச்சர் பதவி தொடர்பான இருகட்சிகளுக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடுகளில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. 288 தொகுதிகளில் கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் கடந்த மாதம் அக்டோபர் 24, 2019 அன்று அறிவிக்கப்பட்டது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க மொத்தம் 145 தொகுதிகளின் பெரும்பான்மை வேண்டும். அப்படி பார்த்தால், மாநிலத்தில் சிவசேனா, என்.சி.பி, ஒரு சில சுயேச்சை எம்.எல்.ஏக்களும் மற்றும் காங்கிரஸ் கட்சியின் வெளிப்புற ஆதரவுடன் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தேவையான 145 சட்டமன்ற தொகுதிகளின் பெரும்பான்மையை எளிதில் கிடைக்கும். சிவசேனாவில் 56 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 54 உறுப்பினர்களைக் கொண்ட என்.சி.பி மற்றும் 44-எம்.எல்.ஏ கொண்ட காங்கிரஸையும் சேர்த்து, 7 சுயேச்சைகளின் ஆதரவும் கிடைப்பதால், இந்த கூட்டணியில் மொத்தம் 161 சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பார்கள்.

மறுபுறம், எதிர்க்கட்சி கூட்டணியில் 105 எம்.எல்.ஏக்கள், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) 2, பகுஜன் விகாஸ் ஆகாதி 3, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 1, சுயேச்சைகள் 6, ஜன சுராஜ்ய சக்தி 1, கிரந்திகாரி ஷெட்கரி கட்சி 1, மகாராஷ்டிரா நவ்னிர்மன் சேனா 1, விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி 1, பிரஹர் ஜனசக்தி கட்சி 2, ராஷ்டிரிய சமாஜ் பக்ஷா 1, சமாஜ்வாடி கட்சி 2 மற்றும் ஸ்வாபிமான் பக்ஷா 1 என மொத்தம் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 117 ஆக இருக்கும். 

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் 2019 -க்குப் பிறகு பல்வேறு கட்சிகளின் பலம் பின்வருமாறு:

Party MLAs
All India Majlis-E-Ittehadul Muslimeen 2
Bahujan Vikas Aaghadi 3
Bharatiya Janata Party 105
Communist Party of India (Marxist) 1
Independent 13
Indian National Congress 44
Jan Surajya Shakti 1
Krantikari Shetkari Party 1
Maharashtra Navnirman sena 1
Nationalist Congress Party 54
Peasants And Workers Party of India 1
Prahar Janshakti Party 2
Rashtriya Samaj Paksha 1
Samajwadi Party 2
Shiv Sena 56
Swabhimani Paksha 1
Total 288

சிவசேனா தனது கட்சியை சேர்ந்தவரை மகாராஷ்டிராவின் முதல்வராகக் கொண்டு வருவதில் பிடிவாதமாக உள்ளது, இந்த கோரிக்கையை பாஜக வெளிப்படையாக நிராகரித்தது. மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் தனிக்கட்சியாக மிகப் பெரிய வெற்றியை பெற்ற என்ற பெயரில் முதலமைச்சர் பதவியை ஐந்து ஆண்டுகள் பெறுவதற்கான உரிமை எங்கள் கட்சிக்கு உண்டு என்றும், சிவசேனாவுடன் இந்த பதவிக்கு 50:50 சூத்திரத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றும் பாஜக தலைமை சுட்டிக் காட்டியுள்ளது.

Trending News