46 வயதில் தாயான பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா!

ப்ரீத்தி ஜிந்தா (preity zinta) பாலிவுட்டில் பிரபலமாக கொடிகட்டி பறந்த நடிகை.  தற்போது ஐபிஎல்-ல் PBKS அணிக்கு உரிமையாளராக உள்ளார்  

Written by - ZEE Bureau | Last Updated : Nov 18, 2021, 04:53 PM IST
46 வயதில் தாயான பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா!

ப்ரீத்தி ஜிந்தா (preity zinta) பாலிவுட்டில் பிரபலமாக கொடிகட்டி பறந்த நடிகை.  90'ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர்.  இவர் தெலுங்கு, பஞ்சாபி மற்றும் ஆங்கில மொழி படங்களில் நடித்துள்ளார்.  இவர் 1998-ல் "தில் சே"  என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.  நெஸ் வாடியா என்பவருக்கும் பிரீத்தி ஜிந்தாவுக்கும் இடையே காதல் மலர்ந்து, பின்னர் இருவருக்குள்ளும் ஏற்பட்ட சில கருது வேறுபாடுகள் காரணமாக அவர்கள் இருவரும் பிரிந்தனர்.  அதனையடுத்து அமெரிக்காவை சேர்ந்த ஜெனி குட்எனப் என்பவரை ரகசியமாக காதலித்து வந்தார்.  2014-ல் இருவரும் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர்.

preityzinta

திருமணத்திற்கு பின்னர் கௌரவ வேடங்களில் நடித்து கொண்டிருந்தவர், சில நாட்களுக்கு பின்னர் திரையுலகிற்கு குட்பாய் சொல்லிவிட்டு திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்தார்.  இந்நிலையில் 46 வயதான ப்ரீத்தி ஜிந்தா வாடகை தாய் ஒருவர் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயாகி உள்ளார்.

 

இந்த செய்தியை அவர் சமூக வலைத்தளம் வாயிலாக அறிவித்துள்ளார்.  "வணக்கம் , நான் மகிழ்ச்சியான ஒரு செய்தி ஒன்றினை உங்களிடம் பகிர வந்துள்ளேன்.  நானும் என் கணவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம்.  எனது இரட்டை குழந்தைகளான ஜெய் ஜிந்தா குட்எனப் (Jai Zinta Goodenough) மற்றும் ஜியா ஜிந்தா குட்எனப் (Gia Zinta Goodenough) இருவரையும் எங்கள் குடும்பத்திற்கு நாங்கள் வரவேற்கிறோம்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.  ஏற்கனவே பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி இதுபோல வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ தேவதை அவள் ஒரு தேவதை! நயன்தாராவின் வாழ்க்கையை மாற்றிய 6 படங்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News