உங்கள் வேலை பொருளாதாரத்தை மேம்படுத்துவது; சர்க்கஸ் காட்டுவது அல்ல!

பொருளாதாரத்தை மேம்படுத்துவது தான் அரசின் வேலை, சர்க்கஸ் காண்பிப்பது அல்ல என மத்திய மந்திரி பியூஷ் கோயலை பிரியங்கா காந்தி கடுமையாக தாக்கியுள்ளார்!

Last Updated : Oct 19, 2019, 05:03 PM IST
உங்கள் வேலை பொருளாதாரத்தை மேம்படுத்துவது; சர்க்கஸ் காட்டுவது அல்ல!

பொருளாதாரத்தை மேம்படுத்துவது தான் அரசின் வேலை, சர்க்கஸ் காண்பிப்பது அல்ல என மத்திய மந்திரி பியூஷ் கோயலை பிரியங்கா காந்தி கடுமையாக தாக்கியுள்ளார்!

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா சனிக்கிழமையன்று அரசாங்கத்தை கண்டித்து, அவர்களின் வேலை "பொருளாதாரத்தை மேம்படுத்துவதே" என்றும் "நகைச்சுவை சர்க்கஸை நடத்துவதில்லை" என்றும் கூறினார். நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் அறிக்கைகளுக்கு பிரியங்கா பதிலளித்தார்.

அமெரிக்க வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜிக்கு இந்த ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்திய  நாட்டின் பொருளாதாரம் தடுமாற்றத்தில் இருப்பதாகவும், அது உடனடியாக சீரடையும் என உறுதி கூற முடியாது என்றும் அபிஜித் பானர்ஜி சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார். 

இதையடுத்து, புனே நகரில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய மந்திரி பியூஸ் கோயல், அபிஜித் பானர்ஜி ஒரு இடதுசாரி சிந்தனையாளர் என விமர்சித்தார். காங்கிரஸ் கட்சியின் வறுமை ஒழிப்பு திட்டமான ‘நியாய்’ திட்டத்தை பானர்ஜி ஆதரித்ததாக கூறிய பியூஸ் கோயல், அவரது இந்த சித்தாந்தத்தை இந்திய மக்கள் நிராகரித்து விட்டதாகவும் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் மத்திய மந்திரிக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில், ‘பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி உள்ளது. அதை மேம்படுத்துவதே மத்திய அரசின் வேலை, காமெடி சர்க்கஸ் காண்பிப்பது அல்ல’ என பிரியங்கா காந்தி சாடியுள்ளார். 

அபிஜித் பானர்ஜி தனது பணியை நேர்மையாக செய்ததால் நோபல் பரிசிற்கு தகுதியானவராக அறிவிக்கப்பட்டார். பாஜக தலைவர்கள் தங்களது வேலையை செய்வதற்கு பதிலாக மற்றவர்களின் சாதனைகளை மறைப்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர் எனவும் பிரியிங்கா தெரிவித்தார். 

 

More Stories

Trending News