டெங்கு காய்ச்சளில் பிரியங்கா காந்தி!

Updated: Aug 25, 2017, 06:46 PM IST
டெங்கு காய்ச்சளில் பிரியங்கா காந்தி!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்களின் மகள் பிரியங்கா காந்தி, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முன்னதாக கடந்த 23ஆம் தேதி காய்ச்சல் காரணமாக பிரியங்கா காந்தி டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பரிசோதனைக்கு பிறகு அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது.

தற்போது அவருக்கு டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனை தலைவர் ராணா தெரிவித்துள்ளார். உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.