ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்குவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
78 நாட்கள் சம்பளத்தை உற்பத்தி சார்ந்த போனசாக வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்மூலம், 12.3 லட்சம் ரெயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.
1#Cabinet: Productivity Linked Bonus to be given for #IndianRailways employees, before Dussehra/Puja festival season https://t.co/KB5VZG1aH1 pic.twitter.com/ilnpJmjQf6
— Ministry of Railways (@RailMinIndia) September 20, 2017
2/Productivity Linked Bonus of 78 days wages to eligible non-gazetted railway employees,12.3 lakh employees to benefit #ShramevJayate pic.twitter.com/Y8vOWNCm3y
— Ministry of Railways (@RailMinIndia) September 20, 2017
இதுதொடர்பாக, மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:-
வழக்கமாக, ரயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 72 நாள் ஊதியம், போனஸாக வழங்கப்பட்டு வந்தது. கடந்த 6 ஆண்டுகளாக, அவர்களுக்கு 78 நாள் ஊதியம், போனஸாக வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அவர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தியின் அடிப்படையில் மாதம் ரூ.7,000 முதல் ரூ.17,951 வரை போனஸாக வழங்கப்படும். இதன் மூலம், மத்திய அரசுக்கு ரூ.2,245 கோடி வரை செலவாகும். அந்தத் தொகை, ஆயுதபூஜை விடுமுறைக்கு முன்பே அவர்களுக்கு வழங்கப்பட்டு விடும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.