புல்வாமா தாக்குதல்: நாங்கள் மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம் -சிஆர்பிஎப்

பயங்கரவாதிகள் தாக்குதலை நாங்கள் மறக்க மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம் என சிஆர்பிஎப் தெரிவித்த்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 15, 2019, 02:02 PM IST
புல்வாமா தாக்குதல்: நாங்கள் மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம் -சிஆர்பிஎப் title=

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் மத்திய சேமக் காவல் படையை சேர்ந்த 44 வீரர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், துயரத்தையும், வேதனையையும் ஏற்ப்படுத்தி உள்ளது. 

இதுக்குறித்து சிஆர்பிஎப் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், பயங்கரவாதிகள் தாக்குதலைக் குறித்து "நாங்கள் மறக்க மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்" எனத் தெரிவித்துள்ளது. புல்வாமா தாக்குதலில் இறந்த எங்கள் வீரர்களை வணங்குகிறோம், வீரமரணம் அடைந்த தியாகிகளின் குடும்பத்துடன் நாங்கள் நிற்கிறோம். இந்த கொடூரமான தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் எனக் பதிவிடப்பட்டு உள்ளது.

நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 70 வாகனங்களில் 2,500 சிஆர்பிஎப் (CRPF) வீரர்கள் பயணம் மேற்கொண்டனர். அந்த வாகன அணிவகுப்பு புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தில் சென்றுக்கொண்டு இருக்கும் போது, அப்பொழுது பயங்கரவாதி திடிரென வெடிகுண்டு நிரம்பிய காரினை கொண்டு வந்து சிஆர்பிஎப் வீரர்கள் பயணித்த கான்வாயில் மோதி வெடிகுண்டுகள் நிரம்பிய கார் வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் இதுவரை 44 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News