புனேவில் ஆறாம் வகுப்பு மாணவரின் தலைமுடியை வகுப்பு ஆசிரிய வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!
விஷ்ராந்த்வாடி புனே இன்டர்நேஷனல் பள்ளியில் கடந்த ஜூலை 17 ஆம் தேதி பள்ளிமாணவரின் தலைமுடியை ஆசிரியர் வெட்டியா சம்பவம் பள்ளி நிர்வாகத்தையும், பெற்றோர்களையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஷ்ராந்த்வாடி புனே சர்வதேச பள்ளியில் 6-வது வகுப்பு மாணவன் ஆர்யன் அமித் வாக்மேர் (வயது 10). இவரின் வகுப்பாசிரியர் ஸ்வேதா குப்த, மாணவன் ஆர்யனை அருகில் அழைத்து தலைமுடியை வெட்டி வித்தியாசமான தண்டனையை வழங்கியுள்ளார்.
வீட்டுக்குச் சென்ற ஆர்யன் தனது தாய் ஆதித்தியிடம் புகார் தெரிவித்துள்ளான். இந்த செயலால் கோபமடைந்த ஆதித்தி உடனடியாக புனே விஷ்ராந்த்வாடி போலீஸ் நிலையத்திற்க்கு சென்று புகார் கொடுத்தார். “எனது மகன் தவறு செய்திருந்தால் தண்டனை தரலாம். ஆனால் தவறு செய்யாத நிலையில் அவனது தலைமுடியை ஏன் வெட்டவேண்டும். ஏற்கெனவே கடந்த ஜூன் மாதத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்தது. நான் அதை அப்போது பெரிதுபடுத்தவில்லை ஆனால் இப்போது பள்ளியிலும், புகார் கொடுத்துள்ளேன்” என்றார் ஆதித்தி.
இதையடுத்து, இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், ஆசிரியர் ஸ்வேதா குப்த-வை பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளனதாகவும் தெரிவித்துள்ளனர்.