ரபேல் ஒப்பந்தம்: மந்திரத்தால் விலை அதிகமானதா மோடி ஜி? -ராகுல் விளாசல்

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல். மந்திரத்தால் விலை அதிகமானதா? என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். 

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Aug 10, 2018, 06:13 PM IST
ரபேல் ஒப்பந்தம்: மந்திரத்தால் விலை அதிகமானதா மோடி ஜி? -ராகுல் விளாசல்
File photo

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா 2016 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இதுகுறித்த தகவல்களை வெளியிடவேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி வருகின்றார். ஆனால் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது, இதுகுறித்து தகவல்கள் ஏதும் தெரிவிக்க முடியாது என்று ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து மறுத்து வருகின்றார்.

ரபேல் போர் விமான ஒப்பந்தம் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய கட்டடத்தின் துவக்க விழாவில் உரையாற்றும் ராகுல் காந்தி ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஏற்ப்பட்டுள்ள முறைகேடு பற்றி பேசினார். அப்பொழுது அவர், ரூ. 540 கோடிக்கு இருந்த ஒப்பந்தம் எப்படி ரூ. 1600 கோடி மாறியது. அது என்ன மந்திரத்தால் மாறியதா மோடி ஜி? எனக் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல் நிறுவனத்துடன் ஏற்ப்பட இருந்த ஒப்பந்தத்தை மாற்றி தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது ஏன்? என சரமாரியாக கேள்விகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.