ராகுலுக்கு நாட்டின் வரலாறு தெரியாது; அவரது ஈகோ பேசுகிறது: மத்திய அமைச்சர்

நாட்டுக்காக போராடிய சாவர்க்கரின் தேசபக்தி குறித்து கேள்விகளை எழுப்பும் ராகுல் காந்திக்கு நாட்டின் வரலாறு தெரியாது. இது அவரது ஈகோ பேசுகிறது என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலளித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 14, 2019, 04:45 PM IST
ராகுலுக்கு நாட்டின் வரலாறு தெரியாது; அவரது ஈகோ பேசுகிறது: மத்திய அமைச்சர் title=

புதுடெல்லி: ராகுல் காந்திக்கு நாட்டின் வரலாறு தெரியவில்லை என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் (Ravi Shankar Prasad) தெரிவித்துள்ளார். வீர் சாவர்க்கர் போன்ற ஒரு சிறந்த தேசபக்தர் குறித்து கருத்து தெரிவிக்கும் ராகுல் காந்திக்கு (Rahul Gandhi) பெரிய மனிதர்களை குறித்து அறிவு இல்லை என்று அவர் கூறினார். காங்கிரஸ் (Congress) கட்சி தலைமையில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் பாரதத்தை காப்போம் என்ற பேரணியில் பேசிய முன்னால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சுக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலளித்துள்ளார்.

ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், இந்திய ராணுவம் மற்றும் பாலகோட் ஏர் ஸ்ட்ரைக் குறித்து ஆதாரம் கேட்டவர்கள், இப்போது பிரிட்டிஷ் கலத்தில் பல ஆண்டுகளாக நாட்டுக்காக போராடிய சாவர்க்கரின் தேசபக்தி குறித்து கேள்விகளை எழுப்புகிறார்கள்.

ராகுலின் வார்த்தைகளை பார்த்தால், அவருக்கு பெரிய மனிதர்களை குறித்து அறிவு இல்லை. அவருக்கு வரலாறு தெரியாது. அவரது வாழ்க்கை குடும்பத்தில் மட்டுமே உள்ளது. இது அவரது ஈகோ பேசுகிறது எனக் கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக, மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், "ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரின் புகைப்படத்தை ட்வீட் செய்து கருத்தை பகிந்துள்ளர். "வீர் சாவர்க்கர்" ஒரு உண்மையான தேசபக்தர்... காந்தி பெயரை தன் குடும்பத்துக்கு சூட்டிக்கொண்டால், அவர்கள் தேசபக்தராக இருக்க முடியாது. ஒரு தேசபக்தராக இருக்க, நரம்புகளில் தூய இந்திய இரத்தம் தேவை எனவும், இந்தியாவை மாறுவேடமிட்டு பலர் கொள்ளையடித்திருக்கிறார்கள். இப்போது அது நடக்காது. இந்த மூவரும் யார்?? இந்த மூன்று பெரும் நாட்டின் குடிமக்களா?? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று காலை டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற "பாரதத்தை காப்போம்" பேரணியில் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பாஜக மீது கடுமையான தாக்குதல் நடத்தினார். அப்பொழுது பேசிய ராகுல் காந்தி, "ரேப் இன் இந்தியா" விவகாரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் பாஜக என்னிடம் கூறியது, ஆனால் எனது பெயர் ராகுல் சாவர்க்கர் அல்ல, எனது பெயர் ராகுல் காந்தி, நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். பாலியல் வன்கொடுமைகளை தடுக்க தவறிய நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா தான் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

Trending News