மும்பை கனமழை எதிரொலி; 54 விமானங்கள் திருப்பி விடப்பட்டன...

மும்பையில் பொழிந்து வரும் கனமழை காரணமாக 54 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளது.

Last Updated : Jul 2, 2019, 09:15 AM IST
மும்பை கனமழை எதிரொலி; 54 விமானங்கள் திருப்பி விடப்பட்டன... title=

மும்பையில் பொழிந்து வரும் கனமழை காரணமாக 54 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக மும்பை விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதை மூடப்பட்டுள்ளது. இதனால் சுமார் 54 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. மும்பை வரவிருந்த 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விஸ்தாரா நிறுவனம் அறிவித்துள்ளது.

முன்னதாக நேற்று இரவு 11.45 மணியளவில் பலத்த மழையின் மத்தியில் ஸ்பைஸ்ஜெட் விமானம் தரையிறங்கியபோது மும்பை விமான நிலையத்தின் முக்கிய ஓடுபாதை இன்று மூடப்பட்டுள்ளது. போயிங் 737-800 என்ற விமானம் ஓடுபாதையின் முடிவில் இன்னும் சிக்கியுள்ளது. இரண்டாம் நிலை ஓடுபாதை இயங்குகிறது, எனினும் விமானங்கள் தாமதமாக விடப்படுகிறது.

ஸ்பைஸ்ஜெட் SG 6237 ஜெய்ப்பூர்-மும்பை விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையை மிஞ்சியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர் எனவும், காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று விமானத்தின் செய்தித் தொடர்பாளர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஒரே இரவில் பெய்த மழையுடன் ஸ்பைஸ்ஜெட் சம்பவம், 54 விமானங்களை அருகிலுள்ள விமான நிலையங்களான அகமதாபாத் மற்றும் பெங்களூருக்கு திருப்பிவிட வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராட்டிர மானிலத்தில் பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் பெய்து வரும் கனமழை தொடர்ந்து நேற்று 4-வது நாளாக நீடித்தது. இரவிலும், பகலிலும் நாள் முழுவதும் மழை பெய்து கொண்டே இருந்தது. 

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் இடைவிடாமல் கொட்டி வரும் மழை மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டு உள்ளது. இந்த பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. சாலைகள், தெருக்களிலும் மழைவெள்ளம் தேங்கி உள்ளது.

விடாமல் பொழிந்து வரும் கனமழையால் நகர பகுதிகள் மற்றும் கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. இதன் காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.  வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.ரெயில் நிலையங்களையும் வெள்ளம் சூழ்ந்தது. மாட்டுங்கா, சயான், கல்வா, தானே, நாலச்சோப்ரா, பால்கர் ரெயில் நிலையங்களில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் தற்போது கடும் மழை காரணமாக 54 விமானங்கள் திருப்பிவிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News