3 வயது குழந்தை தலையில் பாத்திரம் சிக்கி பரபரப்பு!

ராஜஸ்தானில் 3 வயது குழந்தையின் தலையில் பாத்திரம் ஒன்று சிக்கிக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Last Updated : Dec 12, 2019, 09:46 AM IST
3 வயது குழந்தை தலையில் பாத்திரம் சிக்கி பரபரப்பு! title=

ராஜஸ்தானில் 3 வயது குழந்தையின் தலையில் பாத்திரம் ஒன்று சிக்கிக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராஜஸ்தான் மாநிலம் ஜாலோர் என்ற இடத்தில் ஸ்டீல் பாத்திரத்துடன் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தையின் தலையில் பாத்திரத்தை பொருத்திய போது அதில் சிக்கிக் கொண்டுள்ளான். இதிலிருந்து அந்த குழந்தையை மீட்க ஊர் மக்கள் பெரும் முயற்சி செய்தும் முடியாமல் போனது.

இறுதியில் கூரிய ஆயுதம் மூலம் பாத்திரத்தை வெட்டி எடுத்து குழந்தை மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. .

 

 

Trending News