அரசியல்வாதிகளின் பின்னால் ஓடுவதை விட்டுவிட்டு பால்மாடு வளர்க்கலாம் என கூறியிருந்த திரிபுரா முதலமைச்சர் பசுமாடுகள் விநியோகிக்கும் திட்டத்தை தொடங்க உள்ளதாக அறிவிப்பு.....
பட்டதாரிகள் வேலைவாய்ப்புகளை தேடி அரசியல்வாதிகளின் பின்னால் ஓடுவதை விட்டுவிட்டு பால்மாடு வளர்க்கலாம் என கூறியிருந்த திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேவ் ((Biplab Kumar Deb)), 5 ஆயிரம் குடும்பங்களுக்கு பசுமாடுகளை விநியோகிக்கும் திட்டத்தை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மாடு வளர்ப்புக்கு மக்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில், முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இலத்தில் பசுமாடுகளை வளர்த்து, அதன் மூலம் கிடைக்கும் பாலை தானும், தனது குடும்பமும் அருந்தப்போவதாக அவர் கூறியுள்ளார்.
பெரிய தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும் என்றால், 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்தால்தான் 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அவர் கூறியுள்ளார். ஆனால் 5 ஆயிரம் குடும்பங்களுக்கு 10 ஆயிரம் பசுக்களை கொடுத்தால், 6 மாதங்களில் சம்பாதிக்கத் தொடங்கிவிடுவார்கள் எனவும் பிப்லப் குமார் தேவ் குறிப்பிட்டுள்ளார்.