Chennai Rains, Tamil Nadu Weather Latest News: சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கு திசையில் ஆழ்ந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் 800 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில், மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வந்தது.
நாகப்பட்டினத்தில் இருந்து தெற்கு தென்கிழக்கு திசையில் சுமார் 590 கிலோமீட்டர் தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து தெற்கு தென்கிழக்கு திசையில் 710 கிலோமீட்டர் தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கடலோர பகுதிகளில் நாளை (நவ. 27) புயலாக வலுப்பெறுகிறது.
ஃபெங்கல் புயல்
இது சென்னையை ஒட்டிய பகுதிகளில் கரையை கடக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயரிடும் முறைப்படி இந்த முறை சவுதி அரேபியா நாடு பரிந்துரைத்த ஃபெங்கல் (FENGAL) என்ற பெயர் இந்த புயலுக்கு வைக்கப்பட இருக்கிறது.
சென்னையில் அடுத்த மூன்று நாள்கள்...
இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று (நவ. 26), நாளை (நவ. 27) மற்றும் நாளை மறுநாள் (நவ. 28) ஆகிய மூன்று நாட்களுக்கும் பரவலாக மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து சென்னை, திருவாரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மணிநேரங்களில் 31 மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | TNPSCயில் typist வேலை அறிவிப்பு! அரசாங்கத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு!
சென்னையின் நகரப்பகுதிகளிலும், புறநகர் பகுதிகளும் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக மழை தொடர்ச்சியாக மழை பெய்த வருகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளிலும், சாலைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. பொதுமக்கள் இதனால் கடுமையாக சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். ஓஎம்ஆர் சாலைகளில் அதிகளவில் தண்ணீர் தேங்கியிருப்பதால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் எந்த சுரங்கப் பாதைகளிலும் மழைநீர் தேங்கியிருக்கவில்லை என தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
3.7 மீட்டருக்கு கடல் சீற்றம்....
அதேநேரத்தில் மோசமான வானிலை காரணமாக 7 விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 3.7 மீட்டர் வரை நாளை (நவ. 27) கடல் அலை மேலெழும்பக்கூடும். சீற்றம் மற்றும் கடலரிப்பு ஏற்படும் என பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய கடல்சார் தேசிய மையம் (INCOIS) எச்சரிக்கை விடுக்கப்படும். கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், நாகப்பட்டினம் (வடக்கு) மாவட்ட கடலோரப் பகுதிகளுக்கு கடல் சீற்ற எச்சரிக்கையையும் INCOIS விடுத்துள்ளது
முன்னதாக, டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. இதனால் இந்த மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைகின்றனர்.
மேலும் படிக்க | வீடு தேடி வரும் சலுகை.. தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ