இலவச ஜியோ பீச்சர் ஃபோன்: புக் செய்வது எப்படி?

Last Updated : Jul 22, 2017, 09:08 AM IST
இலவச ஜியோ பீச்சர் ஃபோன்: புக் செய்வது எப்படி?

 

அதிகம் எதிர்பார்ப்பை உருவாக்கிய ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ பீச்சர் ஃபோனை முகேஷ் அம்பானி நேற்று அறிமுகம் செய்தார். இந்தியாவில் ஜியோ பீச்சர் ஃபோனை இலவசமாக வழங்குவதாகவும் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

இந்த ஜியோ பீச்சர் ஃபோனை எந்த கட்டணமும் இல்லாமலேயே முன்பதிவு செய்யலாம்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ ஃபோன் என்ற புதிய பேசிக் மொபைலை அறிமுகம் செய்துள்ளது. ஆனால், வழக்கமான பேசிக் மொபைல்கள் போல இல்லாமல் குரல் மூலம் இயக்கும் வசதி, எமர்ஜென்சி கால் வசதி போன்றவையும் உள்ளன. இந்த ஜியோ ஃபோன் முழுக்க முழுக்க இந்தியர்களால் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட மொபைல் ஆகும்.

இந்த மொபைல் ரூ.0 விலையில் கிடைக்கும் என்றும் வைப்புத் தொகையாக ரூ.1500 முதலில் செலுத்திவிட்டு 3 ஆண்டுகளுக்குப் பின் மொபைலை திருப்பிக்கொடுத்து முழு தொகையையும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. 

இந்த ஜியோ ஃபோன் செப்டம்பர் முதல் விற்பனைக்கு வரும். முன்பாக, இந்த ஜியோ ஃபோனை புக் செய்யலாம். முன்பதிவு வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி தொடங்குகிறது.

மேலும் இந்த ஜியோ ஃபோனை ஜியோ கடைகளில் நேரில் சென்றும் புக் செய்யலாம். அல்லது மொபைல் போனில் மை ஜியோ அப்ளிகேஷன் வாயிலாகவும் புக் செய்யலாம் என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கூறியுள்ளது.

ஜியோ பீச்சர் ஃபோனின் சிறப்பம் அம்சங்கள்:-

> 2.4 இன்ச் டிஸ்ப்ளே, 512 எம்.பி.ரேம், 128ஜிபி மைக்ரோ எஸ்.டி. டூயல் சிம், 

> 2 மெகாபிக்சல் ரியர் கேமரா, வி.ஜி.எ. முன்பக்க கேமரா, 2000 

> எம்.எ.எச்.பேட்டரி திறன், எஃப்.எம் ரேடியோ, ப்ளுடூத் 4.1, வீடியோ காலிங்

More Stories

Trending News