இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னரான ரகுராம் ராஜனுக்கு எதிரான பிரசாரத்தில் வெற்றியடைந்த பா.ஜ மாநிலங்களவை எம்.பி. சுப்பிரமணிய சாமி அடுத்த கவுன்டவுனை தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியனுக்கு எதிராக தொடங்கி உள்ளார்.
அவருக்கு எதிராக சில காரணங்களை சுட்டிக்காட்டி, பதவியை வீட்டு நீக்கவேண்டும் என்று டுவிட்டரில் சுப்பிரமணிய சாமி வலியுறுத்தினார்.
இந்நிலையில் அரவிந்த் சுப்பிரமணியனை நீக்க கோரிய சுப்பிரமணிய சாமியின் கோரிக்கையை அமைச்சகம் ஏற்கவில்லை என்று தகவல்கள் கூறிஉள்ளதாக ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டு உள்ளது. முன்னாள் ஐஎப்எம் பொருளியலாளரை தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கும் போதே அரசாங்கம் கருத்தில் கொண்டு இருந்தது என்று நிதி அமைச்சக தகவல்கள் கூறிஉள்ளன. அவரை தேர்வு செய்வதற்கு முன்னதாகவே ஐபிஆர் போன்ற முக்கிய விவகாரங்களில் அவருடைய நிலைப்பாட்டை நிதி அமைச்சகம் தெரிந்திருந்தது, சுவாமியின் விமர்சனத்திற்கு அமைச்சகம் நம்பிக்கை கொடுக்கவில்லை என்று தகவல்கள் குறிப்பிட்டு உள்ளன.
Modi’s chief economic adviser Arvind Subramanian had opposed India on IPR till recently https://t.co/G98SdrI2Ek via @timesofindia
— Subramanian Swamy (@Swamy39) June 22, 2016