OLX-ல் விற்பனைக்கு வந்த இதைப் பார்த்து அனைவருக்கும் ஆச்சரியம்! அதிர்ச்சி!!

OLX-ல் வந்த ஒரு விளம்பரத்தைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள். இம்முறை OLX விளம்பரத்தில் காணப்பட்டது ஒரு MiG-23 போர் விமானம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 5, 2020, 01:46 PM IST
  • MiG -23 போர் விமானம், OLX நிறுவன தளத்தில் 9.99 கோடி ரூபாய் விலையில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டது.
  • MiG -23BN போர் விமானத்தின் புகைப்படம், அதன் விலை மற்றும் ஒரு குறுகிய விளக்கத்துடன் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
  • தற்போதைய அல்லது முன்னாள் மாணவர்கள் யாரும் OLX இல் விளம்பரத்தை பதிவேற்றவில்லை – கல்லூரி.
OLX-ல் விற்பனைக்கு வந்த இதைப் பார்த்து அனைவருக்கும் ஆச்சரியம்! அதிர்ச்சி!! title=

ஆன்லைனில் எதையாவது வாங்க வேண்டும் அல்லது விற்க வேண்டும் என்றால், நம்மில் பெரும்பாலோர் போகும் தளம் OLX தான். இந்தத் தளத்தில் நாம் பல வித பொருட்கள் விளம்பரப்படுத்தப்படுவதை பார்த்துள்ளோம். சிலவற்றைக் கண்டு விபயப்பாகியும் உள்ளோம். இப்போதும் அப்படி ஒரு சம்பவம்தான் நடந்தது. OLX-ல் வந்த ஒரு விளம்பரத்தைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள்.

இம்முறை OLX விளம்பரத்தில் காணப்பட்டது ஒரு MiG-23 போர் விமானம்.

இந்திய விமானப்படை (IAF) அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்திற்கு (AMU) பரிசளித்த கார்கில் போரில் பங்கேற்று ஓய்வுபெற்ற MiG -23 போர் விமானம், OLX நிறுவன தளத்தில் 9.99 கோடி ரூபாய் விலையில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டது.

மைக்கோயன்-குரேவிச் MiG -23BN போர் விமானத்தின் புகைப்படம், அதன் விற்பனை விலை மற்றும் 'சிறந்த போர் விமானம்' என்ற ஒரு குறுகிய விளக்கத்துடன் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, விளம்பரத்தை உருவாக்கியதற்கு பொறுப்பான நபர்களைக் கண்டுபிடிக்க பல்கலைக்கழகத்தால் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. பல்கலைக்கழக ப்ரொக்டர் பேராசிரியர் முகமது வாசிம் அலி ஒரு அறிக்கையில், தற்போதைய அல்லது முன்னாள் மாணவர்கள் யாரும் OLX இல் விளம்பரத்தை பதிவேற்றுவதில் ஈடுபடவில்லை என்று கூறினார்.

“வளாகத்தில் நிறுவப்பட்ட விமானங்களின் விற்பனை குறித்து OLX இல் உள்ள இடுகை தவறானது. அதை ஏலம் எடுக்கவோ விற்கவோ பல்கலைக்கழகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விஷயத்தை நாங்கள் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். இது பல்கலைக்கழகத்திற்கு அவதூறு விளைவிப்பதற்கான ஒரு முயற்சி” என்று பேராசிரியர் முகமது வாசிம் அலி கூறினார்.

விளம்பரத்தை உருவாக்கிய நபர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்கலைக்கழகம் மேலும் கூறியது.

இந்த விளம்பரம் சமூக ஊடகங்களில் வைரலாகிய உடனேயே, பல்கலைக்கழகம் அதை காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் IT பிரிவிற்கு தெரியப்படுத்தியது. பின்னர், விளம்பரம் OLX வலைத்தளத்திலிருந்து நீக்கப்பட்டது.

AMU இன் பொறியியல் மாணவர்கள் விமானத்தின் பாகங்கள், தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு குறித்து ஆய்வில் ஈடுபடுகிறார்கள்.

ALSO READ: Amazon Prime Day 2020:அடேங்கப்பா.. எது வாங்கினாலும் தள்ளுபடி... அசத்தும் அமேசான்..

ஆதாரங்களின்படி, ஓய்வுபெற்ற போர் விமானங்கள் நிறுவப்பட்ட, மாநிலத்தின் முதல் மற்றும் நாட்டின் ஏழாவது பல்கலைக்கழகமாகும் AMU.  டெல்லியில் உள்ள பல பள்ளிகளுக்கும் இந்திய விமானப்படை (IAF) விமானங்களை பரிசாக வழங்கியுள்ளது.

மிக் -23 விமானங்கள் 28 வருட சேவைக்குப் பின்னர் பணிநீக்கம் செய்யப்பட்டன. இவை ஜனவரி 24, 1981 இல் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டதுன.

Trending News