ரியான் கொலை வழக்கு: 11ம் வகுப்பு மாணவர் கைது

Last Updated : Nov 8, 2017, 12:17 PM IST
ரியான் கொலை வழக்கு: 11ம் வகுப்பு மாணவர் கைது title=

ஹரியானா மாநிலம் குருகிராம் அடுத்த பந்த்சியில் அமைந்துள்ள ரியான் சர்வதேச பள்ளியில், 2ம் வகுப்பு மாணவன் பிரத்யுன் தாகூர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டான். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அதைத்தொடர்ந்து போலீசார் பலரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். சிறுவனை பாலியல் தொந்தரவு செய்து கொன்றதாகப் பள்ளி பேருந்து நடத்துநர் அசோக் குமாரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர்.

இந்த வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று மாணவரின் பெற்றோர் கோரிக்கை வைத்தனர். அதைத்தாடர்ந்து வழக்கை சிபிஐக்கு மாற்ற ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் பரிந்துரை செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் ரியான் கொலை செய்யப்பட்டது சம்பந்தமாக 11-ம் வகுப்பு மாணவர் ஒருவரை சிபிஐ கைது செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இந்நிலையில், கைது செய்யப்பட்ட மாணவனின் பெற்றோர் தங்களது மகன் அப்பாவி என்றும், அவனுக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி வருகின்றனர்.

"அவர்கள் (சிபிஐ) என் மகனை நேற்று இரவு கைது செய்தனர். எனது மகன் குற்றம் செய்யவில்லை, தோட்டக்காரர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அவன் தகவல் தெரிவித்தான்" என்று கைது செய்யப்பட்ட மாணவரின் தந்தை கூறினார்.

வாக்குமூல ஆவணங்களை ஒப்புதல் கையெழுத்திட சிபிஐ  கார்கள் கட்டாயப்படுத்த முயற்சித்ததாக அவர் மேலும் கூறினார்.

"குழந்தையின் துணி மீது இரத்தம் கரை எதுவும் இல்லை, அவர் தேர்வு எழுதிக்கொண்டு இருந்தார்," என்று தந்தை கூறினார்.

 

 

 

Trending News