பங்குனி உத்திரம் முன்னிட்டு சபரிமலை கோவில் நடை திறப்பு!

இந்தாண்டுக்கான பங்குனி உத்திர திருவிழாவையொட்டி வரும் 11-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது.

Last Updated : Mar 6, 2019, 04:00 PM IST
பங்குனி உத்திரம் முன்னிட்டு சபரிமலை கோவில் நடை திறப்பு! title=

இந்தாண்டுக்கான பங்குனி உத்திர திருவிழாவையொட்டி வரும் 11-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மகரவிளக்கு பூஜை, மண்டல பூஜை ஆகியவை மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த காலங்களில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதேப்போல் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் நாள் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு விசே‌ஷ பூஜைகள் நடைபெறும். 
மேலும் சித்திரை விஷூ, பங்குனி உத்திரம் போன்ற விழாக்களும் சபரி மலை கோவிலில் சிறப்புடன் நடைபெறும். அந்த வகையில் இந்தாண்டு சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி வருகிற 11-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 

குறிப்பிடப்பட்ட நாள் அன்று சுவாமி ஐயப்பனுக்கு தீபாராதனை மட்டும் காட்டப்படும். வேறு பூஜைகள் எதுவும் நடைபெறாது. மறுநாள் அதிகாலை 4 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்படும். 7.30 மணிக்கு பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் நடைபெறும். இதைத்தொடர்ந்து 10 நாட்கள் சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும்.

அப்போது சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்பட விசே‌ஷ பூஜைகள் நடைபெறும். படி பூஜை, உதயாஸ்தமன பூஜை உள்பட பல்வேறு பூஜைகளும் நடத்தப்படும். இதனையடுத்து வரும் 13-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை தினமும் ஸ்ரீபூதப்பலி, உற்சவபலி போன்றவை நடைபெறும். 20-ஆம் தேதி இரவு 10 மணிக்கு சரங்குத்தியில் பள்ளிவேட்டையும், மறுநாள் 21-ஆம் தேதி காலை 11 மணி அளவில் பம்பை ஆற்றில் சுவாமி ஐயப்பனுக்கு ஆராட்டும் நடைபெறும் என தேவஸ்தான நிற்வாகம் தெரிவித்துள்ளது.  பின்னர் மாலை கொடி இறக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.

Trending News