சண்டிகர் : பாகிஸ்தான் சிறையில், சக கைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த, இந்தியர் சரப்ஜித் சிங்கின் சகோதரி தல்பீர் கவுர், பா.ஜ.,வில் நேற்று இணைந்தார்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சரப்ஜித் சிங், 1991-ம் ஆண்டு பாகிஸ்தான் வீரர்களால் சிறைபிடிக்கப்பட்டு, அந்நாட்டு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டார்.
இந்தியாருக்கு உளவு பார்த்ததாக பாகிஸ்தான் அரசால் குற்றம் சாட்டப்பட்ட அவருக்கு அந்நாட்டு கோர்ட் துாக்கு தண்டனை விதித்தது. சிறையில் கைதிகளால் கடுமையாக தாக்கப்பட்ட அவர், 2013 ஏப்ரலில் உயிரிழந்தார்.
இந்நிலையில், சரப்ஜித் சிங்கின் விடுதலைக்காக, கடுமையாக போராடிய, அவரது சகோதரி தல்பீர் கவுர், பா.ஜ.க வில் நேற்று இணைந்தார். விரைவில் நடக்கவுள்ள, பஞ்சாப் சட்டசபை தேர்தலில், தல்பீர் கவுர், பா.ஜ.க வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.