இந்தியாவை 'வலுவான தேசமாக' மாற்றிய இரும்புமனிதர் வல்லபாய் படேலின் நினைவு தினம்

இன்று, டிசம்பர் 15 சர்தார் வல்லப் பாய் படேல் ( Sardar Vallabh Bhai Patel) அவர்களின் நினைவு நாள். 1950 டிசம்பர் 15 அன்று மும்பையில் காலமானார். சுதந்திரத்திற்கு (independence) முன்னர் 562 சுதேச மாநிலங்களை இந்தியாவாக ஒன்றிணைத்த இரும்பு மனிதரின் வாழ்க்கை ஒரு சரித்திரம்.  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 15, 2020, 10:20 PM IST
  • இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் நினைவு நாள் இன்று
  • 1950ஆம் ஆண்டு மும்பையில் காலமனார் இரும்பு மனிதர்
  • சுதந்திர இந்தியாவின் சிற்பிகளில் ஒருவர் சர்தார் வல்லபாய் படேல்

Trending Photos

இந்தியாவை 'வலுவான தேசமாக' மாற்றிய இரும்புமனிதர் வல்லபாய் படேலின் நினைவு தினம் title=

புதுடெல்லி: இன்று, டிசம்பர் 15 சர்தார் வல்லப் பாய் படேல் ( Sardar Vallabh Bhai Patel) அவர்களின் நினைவு நாள். 1950 டிசம்பர் 15 அன்று மும்பையில் காலமானார். சுதந்திரத்திற்கு (independence) முன்னர் 562 சுதேச மாநிலங்களை இந்தியாவாக ஒன்றிணைத்த இரும்பு மனிதரின் வாழ்க்கை ஒரு சரித்திரம்.  

ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த படேல் அவர்கள், ராஜதந்திர திறன்களுக்காக நினைவுகூரப்படுகிறார். சுதந்திர இந்தியாவை ஒன்றிணைத்த பெருமை பெற்ற படேலின் அரசியல் மற்றும் ராஜதந்திர செயல்பாடுகளால் அனைவராலும் மெச்சப்படுபவை.
 
சர்தார் வல்லபாய் படேல் (Sardar Vallabh Bhai Patel) 1950 டிசம்பர் 15 அன்று மும்பையில் இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தார். டெல்லியின் வானிலை மற்றும் குளிரால் அவர் அவதிப்பட்டார். ஆரோக்கியம் சீர்குலையத் தொடங்கியது. எனவே மருத்துவர்கள் அவரை விமானம் மூலம் மும்பைக்கு அழைத்துச் சென்றனர்.  ஆனால் ஆரோக்கியம் மேம்படாத நிலையில் மும்பையில் தனது இன்னுயிரை நீத்தார் இரும்பு மனிதர். 
 
இரும்பு மனிதரை இன்று பலரும் நினைவுகூர்கிறார்கள். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இரும்பு மனிதரின் நினைவு நாளான இன்று டிவிட்டரில் அஞ்சலி செலுத்தியிருக்கிறார். 

சர்தார் வல்லபாய் படேல் துணைப் பிரதமர் (Deputy Prime Minister) பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக 1948 ஜனவரி 12 ஆம் தேதியன்று தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு (Mahatma Gandhi) ஒரு கடிதம் எழுதினார். ஆனால் அவரை பதவியில் இருந்து விலக மகாத்மா காந்தி அனுமதிக்கவில்லை.
 
 
ராஜினாமா செய்யும் போது, ​​அவர் காந்திக்கு (Mahatma Gandhi) எழுதிய கடிதத்தில், 'வேலைச் சுமை மிகவும் அதிகமாக உள்ளது, அந்த பளு என்னை அழுத்துகிறது. நான் இன்னமும் அதிக சுமையை எடுத்துக்கொள்வதன் தாக்கம் நாட்டின் நலனில் பிரதிபலிக்கும் என்பதை நான் புரிந்துகொண்டேன்’ என்று உருக்கமான கடிதத்தை எழுதியிருந்தார். இந்த கடிதம், நாட்டின் மீதான அவரின் அபிமானத்தை எடுத்துக் காட்டுகிறது.
 
படேல் படிப்பில் மிகவும் சுட்டியாக இருந்தார். சர்தார் படேல் வக்கீல் படிப்பு படிக்க தனது 36 வயதில் இங்கிலாந்து (England) சென்றார். கல்லூரிக்குச் சென்ற அனுபவம் அவருக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம். ஆனாலும் 36 மாத வக்கீல் படிப்பை வெறும் 30 மாதங்களில் முடித்தார்.
 
சர்தார் படேலின் தலைமையினால் தான் 562 சுதேச பிரதேசங்கள் இந்தியா (India)  என்ற ஒரு கண்ணியில் இணைந்தன. இது உண்மையில் மிகப் பெரிய சாதனையாகும். சர்தார் வல்லபாய் படேல் பிரதமராக இருந்திருந்தால், காஷ்மீர் பிரச்சனைக்கு அப்போதே தீர்வு ஏற்பட்டிருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
 
ஒற்றுமைக்கான சிலை (Statue of Unity) என்பது இரும்பு மனிதருக்கு இந்தியா வழங்கிய மரியாதை. சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவாக அமைக்கப்பட்ட மிக உயரமான சிலை குஜராத் மாநிலத்தில் நர்மதா அணைக்கு அருகில் சாது பெட் தீவில் அமைக்கப்பட்டுள்ளது. 20,000 சதுர மீட்டர் அளவுள்ள இடத்தில், 12 சதுர கிமீ பரப்பளவினைக் கொண்ட ஏரியில் அமைந்துள்ள இரும்பு மனிதரின் சிலை வானளாவிய அவரது புகழை என்றென்றும் உலகுக்கு எடுத்துச் சொல்லும்.
 
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News