ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து, தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் சட்டப்படு தமிழக ஆளுநர் சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
எஎன்ஐ இடம் சுப்ரமணியன் சுவாமி அளித்துள்ள பேட்டி:-
ஆட்சியமைக்க சசிகலாவுக்கு கவர்னர் அழைப்பு விடுக்க வேண்டும். சசிகலாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க கவர்னர் காத்திருப்பது ஏன்?
சசிகலா எம்.எல்.ஏ.க்கள் பட்டியல் தகவலை கொடுத்தார் அனால் ஓ. பன்னீர்செல்வம் கொடுக்க வில்லை. சசிகலாவுடன் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அதிகம் உள்ளது. இவை அனைத்தும் தெரிந்துக்கொண்டும் ஆளுநர் எதற்கு காத்திருக்கிறார்?
இவ்வாறு பேட்டி அளித்தார்.