SBI Alert! இந்த ‘2’ தேதிகளில் சில மணி நேரம் ஆன்லைன் வங்கி சேவைகள் இயங்காது..!!

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு! பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆன்லைன் வங்கி சேவைகள், டிஜிட்டல் வங்கிச் சேவைகள் சிறிது நேரத்திற்கு இயங்காது என தகவல் வெளியாகியுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 6, 2021, 12:22 PM IST
  • SBI வங்கியின் ஆன்லைன் சேவைகள் கிடைக்காத நேரத்தை தெரிந்து கொள்ளவும்
  • எஸ்பிஐ ட்வீட் மூலம் நேரத் தகவலை அளித்தது
  • பராமரிப்பு செயல்பாடு காரணமாக ஆன்லைன் வங்கி இயங்காது.
SBI Alert! இந்த ‘2’ தேதிகளில் சில மணி நேரம் ஆன்லைன் வங்கி சேவைகள் இயங்காது..!! title=

SBI Latest News: பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான தகவல். நீங்கள் SBI இணைய வங்கி சேவைகளைப் பயன்படுத்துபவர்கள் என்றால், உங்களுக்கான ஒரு முக்கிய் செய்தி. எஸ்பிஐயின் ஆன்லைன் வங்கி சேவைகள் நாளை மற்றும் நாளை மறுநாள் சிறிது நேரம் இயங்காது 

SBI தனது ஆன்லைன் வங்கி சேவைகள் ஆகஸ்ட் 6-7 தேதிகளில் சில மணிநேரங்களுக்கு இயங்காது. பராமரிப்பு பணிகள் காரணமாக, சேவைகள் சிறிது நேரம் மூடப்படும் என்று எஸ்பிஐ கூறுகிறது. இந்த நேரத்தில், வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ யோனோ (SBI Yono), எஸ்பிஐ யோனோ லைட் (SBI Yono Lite) மற்றும் யோனோ பிசினஸ் உள்ளிட்ட பிற டிஜிட்டல் வங்கி தளங்கள் உட்பட. எஸ்பிஐயின் இணைய வங்கி சேவைகள் எதையும் பயன்படுத்த முடியாது, 

ஆன்லைன் வங்கி சேவைகள் ஆகஸ்ட் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் அதாவது நாளை மற்றும் நாளை மறுநாள் இயங்காது. எஸ்பிஐ அதன் நேர விபரத்தை அளித்துள்ளது, அதன்படி எஸ்பிஐயின் அனைத்து டிஜிட்டல் வங்கி தளங்களும், ஆகஸ்ட் 6 ம் தேதி 22.45 மணி முதல் ஆகஸ்ட் 7 ம் தேதி 01.15 மணி வரை இயங்காது. இது தொடர்பாக வங்கி ட்வீட் செய்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க எடுக்கப்படும் இந்த முயற்சிக்கு, வாடிக்கையாளர்களை ஒத்துழைக்க வேண்டுகிறோம் என்று SBI கூறியுள்ளது. அதாவது, ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 7 வரை, எஸ்பிஐயின் ஆன்லைன் சேவைகள் மொத்தம் 150 நிமிடங்களுக்கு இயங்காது.

ALSO READ | Amazon Great Freedom Festival 2021: அமேசானில் தள்ளுபடி விலையில் பொருட்களை அள்ளலாம்

எஸ்பிஐ பராமரிப்பு காரணமாக டிஜிட்டல் வங்கி சேவைகளை நிறுத்துவது இது முதல் முறை அல்ல. முன்னதாக, ஜூலை 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் எஸ்பிஐ இணைய வங்கி, யோனோ, யோனோ லைட் மற்றும் யுபிஐ சேவையை நிறுத்தி வைத்திருந்தது. அதே போன்று, ஜூலை 3 ஆம் தேதி, 4 ஆம் தேதியும் சேவைகள் நிறுத்தப்பட்டது. ஜூன் மாதத்திலும், ஜூன் 13 மற்றும் ஜூன் 20 ஆகிய தேதிகளில் 4-4 மணி நேரம் தனது சேவைகளை நிறுத்தியது.

பாரத ஸ்டேட் வங்கிக்கு நாடு முழுவதும் 22,000 க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. டிசம்பர் 31, 2020 நிலவரப்படி, வங்கியின் இணைய வங்கி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சுமார் 8.5 கோடி. மொபைல் வங்கி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 1.9 கோடி. வங்கியின் UPI வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சுமார் 13.5 கோடி.. வங்கியின் சேவை நிறுத்தபட்டால், பல வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.

ALSO READ | Aadhaar: ஒரு நபர் இறந்த பிறகு அவரது ஆதார் எண் ரத்தாகுமா; அரசு கூறுவது என்ன..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News